Bank Holidays: 12 நாட்கள் வங்கி விடுமுறை...முன்கூட்டியே வங்கி வேலைகளை முடிச்சிடுங்க

Bank Holidays March 2023: மார்ச் மாதத்தில் மட்டும் வார இறுதி நாட்கள் உட்பட பண்டிகைகளுடன் சேர்த்து மொத்தமாக 12 நாட்கள் வங்கிகள் இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 22, 2023, 06:26 AM IST
  • மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.
  • வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.
  • மார்ச் மாதத்தில் சுமார் 9 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும்
Bank Holidays: 12 நாட்கள் வங்கி விடுமுறை...முன்கூட்டியே வங்கி வேலைகளை முடிச்சிடுங்க title=

Bank Holidays March 2023:  நாடு முழுவதிலும் உள்ள வங்கிகளில் மாதந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதத்தில் வார இறுதி நாட்கள் உட்பட பண்டிகை காலங்களுடன் சேர்ந்து 12 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் முடிய இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், தற்போது மார்ச் மாதத்திற்கான பட்டியலை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் மார்ச்சில் 9 நாட்கள் செயல்படாது. பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் சிலர் வங்கி விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

மேலும் படிக்க | உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி, இந்நாளில் வட்டி பணம் கிடைக்கும்

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. அதன்படி, மார்ச் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் மாத வங்கி விடுமுறை பட்டியல்:
மார்ச் 3 சாப்சார் குட்
மார்ச் 5 ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 7 ஹோலிகா தஹன்
மார்ச் 8 துலேதி / டோல்ஜாத்ரா / ஹோலி 
மார்ச் 9 ஹோலி பண்டிகை
மார்ச் 11 மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 12 ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 22 குடி பத்வா / உகாதி / பீகார் நாள் / சஜிபு நோங்மபான்பா (சீரௌபா) / தெலுங்கு புத்தாண்டு
மார்ச் 25 நான்காவது சனிக்கிழமை
மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 30 ஸ்ரீ ராம நவமி

முதல் வங்கி விடுமுறை மார்ச் 3 ஆம் தேதி தொடங்குகிறது. சில மாநிலங்களில் உள்ள வங்கிகள் ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியின்படி விடுமுறையைக் கடைப்பிடிக்கும். மார்ச் மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் உள்ளன, அவை மார்ச் 5,12,19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வருகின்றன. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மார்ச் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருகின்றன.

மேலும் படிக்க | உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டதா... நோ டென்ஷன் - இதை பண்ணுங்க போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News