UCO Bank Recruitment 2022: பாதுகாப்பு அதிகாரி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை யூகோ வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப் படிப்பு படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம். 19 அக்டோபர் 2022 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். UCO வங்கி பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்லைன் தேர்வில் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் JMGS-1 க்கான பாதுகாப்பு அதிகாரி பதவிக்கான தேர்வு செய்யப்படும். மாதம் ரூ 36000 முதல் ரூ 63840 வரை சம்பளம் கிடைக்கும் என்று யூகோ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, சம்பளம், தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | திருப்பூரில் அரசு வேலைக்கான வாய்ப்பு! நேரடி நேர்காணல் மூலம் பணி நியமனம்


கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


UCO வங்கி பாதுகாப்பு அதிகாரி ஆட்சேர்ப்பு 2022 தேர்வு செயல்முறை
IBPS மூலம் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வில், தேர்வர்களின் செயல்திறன் அடிப்படையில் பணிக்கான தேர்வு நடைபெறும். வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
ஆன்லைன் தேர்வு முறை
சோதனை பெயர்
தொழில் அறிவு
தற்போதைய பொருளாதார சூழ்நிலை மற்றும் பொது விழிப்புணர்வு
ஆங்கில மொழி
கணினி அறிவு


UCO வங்கி பாதுகாப்பு அதிகாரியாக விண்ணப்பிக்கும் முறை
 
இந்தக் காலிப் பண்யிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், முதலில் www.ucobank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும்.


மேலும் படிக்க | பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா பிரசாந்த் கிஷோர்! ஜன் சூரஜ் யாத்திரை சர்ச்சை


இப்போது இங்கே நீங்கள் "ஆட்சேர்ப்பு" என்ற தெரிவு இருக்கும். அதைக் கிளிக் செய்து, "SCALE I இன் பாதுகாப்பு அதிகாரி" ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்குச் செல்ல வேண்டும்.


இப்போது நீங்கள் "ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


அதைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும். இங்கே உங்கள் முழு விவரங்களையும் உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.


நீங்கள் பூர்த்தி செய்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.


மேலும் படிக்க | மதுரை தபால் நிலையத்தில் வேலை வாய்ப்பு - நல்ல சம்பளம்; வாய்ப்பை தவறவிடாதீர்கள்


மேலும் படிக்க | டிசிஎஸ்ஸில் வேலை வேண்டுமா? இதோ விவரமான வழிமுறைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ