HDFCக்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த இந்த அரசு வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, தற்போது பல வங்கிகள் தங்களின் கொள்கை விகிதங்களை மாற்றப்பட்டுள்ளன.
எச்டிஎப்சி வங்கி சார்பில் வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு, தற்போது மற்றொரு அரசு வங்கியும் உயர்த்தியுள்ளது. அதன்படி தற்போது, பேங்க் ஆஃப் பரோடாவும் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதன்பின் லோனுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவீதம் பேங்க் ஆஃப் பரோடா வங்கி அதிகரித்துள்ளது. பாங்க் ஆப் பரோடா பங்குச் சந்தைக்கு அளித்துள்ள தகவலில், எம்சிஎல்ஆர் 0.1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும்
இந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் மே 12 முதல் அமலுக்கு வரும் என்று பேங்க் ஆஃப் பரோடா வங்கி தெரிவித்துள்ளது. இதுவரை 7.35 சதவீதமாக இருந்த ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் தற்போது 7.40 சதவீதமாக வங்கியால் மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் வங்கியின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த வகை கடன்களின் கீழ் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி: வட்டி விகிதத்தை அதிகரித்தது HDFC வங்கி
பேங்க் ஆஃப் பரோடாவின் எம்சிஎல்ஆர் எவ்வளவு அதிகரித்துள்ளது
இது தவிர, மூன்று மாதங்கள் மற்றும் ஆறு மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் முறையே 7.15 சதவீதத்திலிருந்து 7.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு நாள் மற்றும் ஒரு மாத எம்சிஎல்ஆர் அடிப்படையிலான கடன்களுக்கான இணைய கட்டணம் 0.10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 6.60 சதவீதமாக இருந்த இந்த கட்டணம் 7.05 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளது.
ரெப்போ விகித உயர்வுக்குப் பிறகு இந்த மாற்றங்கள் ஏற்பட்டது
கடந்த மே 4ம் தேதி ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தியதை அடுத்து பேங்க் ஆப் பரோடா இந்த முடிவை எடுத்துள்ளது. முன்னதாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கரூர் வைஸ்யா வங்கி போன்றவையும் தங்கள் எம்சிஎல்ஆர் மற்றும் ரெப்போ ரேட் இணைக்கப்பட்ட வட்டி விகிதங்களைத் திருத்தியது என்பது குறிப்பிடத்தகக்து.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரெப்போ ரேட் அடிப்படையில் கடனுக்கான வட்டி வீதத்தை 7.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த வட்டிவீத உயர்வு 10ம் தேதி முதல் அமலாகியுள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி வீட்டுக் கடன்களுக்கான வட்டியை 30 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. இந்த வட்டிவீத உயர்வு 9ம் தேதி முதல் அமலாகியுள்ளது. ஹெச்டிஎப்சி வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி 6.7 சதவீதமாக முன்பு இருந்தது. இனிமேல் 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் லிங்க் செய்யப்பட்ட வட்டி விகிதமானது 6.50. சதவீதத்தில் இருந்து, 6.90 சதவீதமாக அதிகரித்தது. இது ஜூன் 1ல் இருந்து அமலுக்கு வரவுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி கடனுக்கான வட்டியை 40 புள்ளிகள் உயர்த்தி 8.10 சதவீதமாக அதிகரித்தது.
மேலும் படிக்க | ஆர்பிஐ அதிரடி முடிவு, வட்டி விகிதங்கள் உயர்ந்தன: வீடு, வாகன கடன் இஎம்ஐ அதிகரிக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR