வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி: வட்டி விகிதத்தை அதிகரித்தது HDFC வங்கி

HDFC Bank: ஹெச்டிஎஃப்சி வங்கி, வீட்டுக் கடன்களுக்கான சில்லறை முதன்மைக் கடன் விகிதத்தை மே 9 முதல் 30 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்தது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 7, 2022, 04:27 PM IST
  • வீட்டுக் கடன்களுக்கான சில்லறை பிரைம் லெண்டிங் விகிதத்தில் சமீபத்திய உயர்வு EMI களில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
  • இந்த வார தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை உயர்த்திய பிறகு, எச்டிஎஃப்சி விகிதங்களை உயர்த்துவதற்கான முடிவு வந்துள்ளது.
  • ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.40% ஆக உயர்த்தியுள்ளது.
வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி: வட்டி விகிதத்தை அதிகரித்தது HDFC வங்கி title=

புது தில்லி: இந்தியாவின் தலைசிறந்த வீட்டுக் கடன் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கி, சனிக்கிழமை அதாவது மே 7 அன்று, வீட்டுக் கடன்களுக்கான சில்லறை முதன்மைக் கடன் விகிதத்தை மே 9 முதல் 30 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்தது.

வீட்டுக் கடன்களுக்கான சில்லறை பிரைம் லெண்டிங் விகிதத்தின் சமீபத்திய உயர்வு, கடன் வாங்குபவர்கள் செலுத்தும் இஎம்ஐ-களில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இந்த வார தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதங்களை உயர்த்திய பிறகு, எச்டிஎஃப்சி விகிதங்களை உயர்த்துவதற்கான முடிவை எடுத்துள்ளது. 

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.40% ஆக உயர்த்தியது. இது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆர்பியை விகிதங்களில் முதன்முறையாக செய்துள்ள விகித உயர்வு மாற்றமாகும். 

முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை ரெப்போ விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்தார். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.40% உயர்த்தியது. 

மேலும் படிக்க | ஆர்பிஐ அதிரடி முடிவு, வட்டி விகிதங்கள் உயர்ந்தன: வீடு, வாகன கடன் இஎம்ஐ அதிகரிக்கலாம் 

எச்டிஎஃப்சி-க்கு முன்னதாக, பல பொது மற்றும் தனியார் கடன் வழங்குநர்கள் புதன்கிழமை ஆர்பிஐ-இன் திடீர் நடவடிக்கைக்குப் பிறகு கடன் மற்றும் வைப்பு விகிதங்களை அதிகரித்துள்ளனர். உதாரணமாக, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை எக்ஸ்டர்ணல் பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 40 bps அதிகரித்துள்ளன.

“ஐசிஐசிஐ பேங்க் எக்ஸ்டெர்னல் பெஞ்ச்மார்க் லெண்டிங் ரேட் (I-EBLR) என்பது ஆர்பிஐ பாலிசி ரெப்போ ரேட், ரெப்போ விகிதத்தை விட மார்க்-அப் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. I-EBLR ஆனது 8.10 சதவீதம் p.a.p.m. மே 4, 2022 முதல் அமலுக்கு வருகிறது,” என்று ஐசிஐசிஐ-ன் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இபிஎல்ஆர் என்பது வெளிப்புற அளவுகோல்களைக் கருத்தில் கொண்டு வங்கிகளால் தீர்மானிக்கப்படும் கடன் விகிதமாகும். இந்த காரணிகளில் ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட் மற்றும் பிற காரணிகள் அடங்கும். எளிமையான சொற்களில், இபிஎல்ஆர் என்பது கடன் வாங்குபவர்கள் வங்கிகளில் இருந்து பணம் பெறுவதற்கான குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். 

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனது உரையில், ‘உலகப் பொருளாதாரத்தின் நிலைமை மோசமடைந்து வருகிறது. பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தம் தொடர்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் கவலை அளிக்கிறது. போரின் காரணமாக பணவீக்கம் மற்றும் வளர்ச்சியின் கணிப்பு மாறிவிட்டது.’ என கூறினார்.

மேலும் படிக்க | கார் வாங்கணுமா? இந்த வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ளது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News