புதுடெல்லி: இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 29 நாட்கள் உள்ளன. அதில், வங்கிகள் (Banks) சுமார் 12 நாட்கள் செயல்படாது. அத்தகைய நிலையில் உங்கள் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வங்கிகளின் நீண்ட வேலைநிறுத்தம் மற்றும் தேசிய விடுமுறை காரணமாக, அடுத்த மாதத்தின் பணம் சம்பந்தமாகக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வது நல்லது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12 நாட்களுக்கு வங்கிகள் ஏன் மூடப்படும்?
சம்பள உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் சங்கங்கள் பிப்ரவரி 1, 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. இது தவிர, மாதத்தில் 6 விடுமுறைகள் (இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும்) உள்ளன. இது தவிர, பிப்ரவரி 21 அன்று மகாசிவராத்திரிக்கு அரசு விடுமுறை உண்டு. மொத்தத்தில், அடுத்த மாதம் முழுவதும் 12 நாட்களுக்கு வங்கி தொடர்பான எந்த வேலையும் நடக்காது.


பிப்ரவரி மாதத்தில் வங்கி வேலைகளை எவ்வாறு கையாள்வது?
அடுத்த மாதம் விடுமுறை நாட்களைப் பார்க்கும்போது, வங்கி ​​வேலை நாட்களில் எல்லா வேலைகளையும் நீங்கள் கையாள வேண்டும். பந்த் காரணமாக உங்கள் மாத தவணைகளுக்கான காசோலைகள் முன்கூட்டியே வங்கியில் டெபாசிட் செய்யுங்கள். கடைசி நாள் தவிர வரி தொடர்பான அனைத்து வேலைகளையும் முன்பே கையாள்வது நல்லது. முக்கியமான கொடுப்பனவுகளுக்கு ஒரு நாளைக்கு முன்பே வங்கியில் பணம் போட்டி விடுங்கள். வேலை மற்றும் அன்றாட செலவுகளை நடத்துவதற்கு தேவையான பணத்தை முன்கூட்டியே கையில் வைத்திருப்பது நல்லது. ஏனென்றால் வங்கி பணிநிறுத்தம் காரணமாக ஏடிஎம் இயந்திரம் மீதும் நேரடி விளைகளை ஏற்படுத்தலாம். அதாவது ATM இயந்திரங்கள் பல இடங்களில் செயல்படாமல் இருக்கலாம்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.