இந்த இரண்டு நாட்கள் வங்கிகள் செயல்படாது - ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
முக்கியச் செய்தி! அடுத்த வாரம் இந்த இரண்டு நாட்களுக்கு உங்கள் வங்கியில் வேலைநிறுத்தம் இருக்கலாம். வங்கித் தொடர்பான முக்கியமான வேலையை முன்கூட்டியே செய்துக்கொள்ளவும்.
வங்கி யூனியன் வேலைநிறுத்தம்: வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கியச் செய்திகள். நாட்டில் உள்ள அரசு வங்கி ஊழியர்கள் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வங்கி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த தகவலை வங்கி யூனியன்களின் ஐக்கிய மன்றம் (UFBU) தெரிவித்துள்ளது. வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு 2021 பிப்ரவரி 1 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தாக்கல் செய்த பட்ஜெட்டில், இரண்டு வங்கிகளை தனியார்மயமாக்குவதாக அறிவித்தார். அதன்பிறகு மத்திய அரசும் அதற்கான ஆயத்தத்தை தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021ஐக் கொண்டுவர மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
டிசம்பர் 16, 17 நாட்களில் வங்கி வேலைநிறுத்தம்:
வங்கிகள் தனியார்மயமாக்கும் (Public Sector Banks) மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தை வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் (UFBU) அறிவித்துள்ளது. இந்த மாதம் 16 மற்றும் 17 என இரு நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக வங்கி யூனியன் அமைப்பான யுஎப்பியு தெரிவித்துள்ளது.
வேலை நிறுத்தத்திற்கான காரணம் என்ன?
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC) ஒரு போராட்டத்தை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து வரும் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ALSO READ | Bank Holiday in December 2021: மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது
டிசம்பர் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை:
மறுபுறம், இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர பட்டியலில் 2021 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் டிசம்பர் மாதத்தில் வார விடுமுறைகள் உட்பட 12 நாட்கள் வரை மூடப்பட்டிருக்கும்.
டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் உட்பட ஏழு விடுமுறை நாட்கள் வரை RBI பட்டியலில் (Reserve Bank Of India) குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், கிறிஸ்துமஸ் மாதத்தின் நான்காவது சனிக்கிழமையில் வருவதால் அனைத்து வங்கிகளுக்கும் அறிவிக்கப்பட்ட விடுமுறையாகும். எனவே, வங்கிகளுக்கு இந்த மாதம் 12 நாட்கள் விடுமுறை (Bank Holidays) அளிக்கப்படுகிறது.
மாநில வாரியாக விடுமுறை பட்டியல்:
டிசம்பர் 3: புனித பிரான்சிஸ் சேவியரின் விழா - கோவா
டிசம்பர் 18: U SoSo Tham இறந்த நாள்- ஷில்லாங்
டிசம்பர் 24: கிறிஸ்துமஸ் விழா (கிறிஸ்துமஸ் ஈவ்) - ஐஸ்வால், ஷில்லாங்
டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் — கவுகாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம்
டிசம்பர் 27: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - ஐஸ்வால்
டிசம்பர் 30: யு கியாங் நங்பா - ஷில்லாங்
டிசம்பர் 31: புத்தாண்டு ஈவ் - ஐஸ்வால்
ALSO READ | Bank Holidays: வங்கி விடுமுறை; ஏடிஎம்களின் நிலை என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR