Be careful applying Ration Card: வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடிமக்கள் குடும்ப அட்டை (Ration Card) மூலம் உணவு தானியங்களை மிகவும் மலிவான விலையில் பெறுகிறார்கள். இந்த அட்டையை மாநில அரசுகள் வழங்குகின்றன. ரேஷன் கார்டுகள் மூலம் மலிவான உணவு தானியங்கள் வாங்குவது மட்டுமல்ல, இது ஒரு முக்கியமான அரசாங்க ஆவணமாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ரேஷன் கார்டில் பல நன்மைகள் உள்ளன. அதன் மூலம் ஏழை மக்கள் தங்கள் வறுமையை போக்கி சற்று நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சைபர் கும்பல் மக்களின் இந்த தேவையைப் பயன்படுத்தி மோசடி செய்து வருகின்றனர். உலகில் இணைய மோசடிக்கு என பல வலைத்தளங்கள் உள்ளன. பொதுமக்கள் அறியாமல் இந்த மோசடிக்கு பலியாகிறார்கள். போலி வலைத்தளம் (Fake Website) மூலம் ரேஷன் கார்டுகளை தயாரிப்பதில் பல வழக்குகள் உள்ளன.


ALSO READ | Ration Card: குறைந்த ரேஷன் கிடைக்கிறதா? இந்த எண்களில் உங்கள் புகாரை தெரிவிங்கள்...


அத்தகைய வலைத்தளத்தின் மூலம், ஆன்லைன் (Online Ration  Card) மூலம் ரேஷன் அட்டையை பெறலாம் என்ற போர்வையில் சிக்கிக் கொள்கிறார்கள் மற்றும் ரேஷன் கார்டை உருவாக்குவதற்கு மிகப்பெரிய தொகை வசூலிக்கப்படுகிறது. வாடிக்கையாளர் தனக்கு மோசடி நடந்துள்ளது என்பது கூட காலதாமதமாகி தான் தெரிகிறது.


அதே நேரத்தில், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களிடமிருந்து போலி அட்டைகளை (Fake Ration Card) வழங்குவதன் மூலமும் பல சந்தர்ப்பங்களில் பணம் சேகரிக்கப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 


இப்படி மோசடி கும்பலிடம் குடும்ப அட்டையை வாங்கிய ஒரு அட்டைதாரர் ரேஷன் கடைக்கு சென்று ரேஷன் கார்டைக் காண்பிக்கும் போது, அது போலியானது என்று கண்டறியப்படுகிறது.


ALSO READ | Ration Card வேண்டுமா? எப்படி விண்ணப்பிப்பது? நிபந்தனை என்ன? கட்டணம் எவ்வளவு? முழு விவரம்


அரசாங்கத்தின் வழிமுறைகளி புறக்கணித்து, சீக்கிரம் ரேஷன் கார்டைப் பெற விரும்புவதால் மக்கள் மோசடிக்கு ஆளாகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்களுக்கு தான்  பெரும் சேதத்தை அளிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், உண்மையான அட்டையைப் பெறுவதற்கான சரியான மற்றும் நிலையான நடைமுறையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.


ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க (Apply for a Ration Card), நீங்கள் உங்கள் மாநிலத்தின் உணவு மற்றும் தளவாடங்கள் துறை போர்ட்டலைப் பார்வையிட வேண்டும். வெவ்வேறு மாநிலங்களுக்கு அவற்றின் சொந்த இணையதளங்கள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த இணையதளங்களிலிருந்து ரேஷன் கார்டு விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். படிவத்தை நன்கு பூர்த்தி செய்து அருகிலுள்ள ரேஷன் கடை அல்லது உணவு விநியோக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர் என்றால், படிவத்தை தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.