Ration Card Apply Online: ஆதார் மற்றும் பான் அட்டைகளைப் போலவே, ரேஷன் கார்டும் (Ration Card) முக்கியமான ஆவணமாகும். இந்த அட்டையின் உதவியுடன் பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கிறது. மறுபுறம், இது ஒரு அடையாள அட்டையாகவும் செயல்படுகிறது. மேலும் பல மாநிலங்களில் "ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை" (One nation one card) முறையை மத்திய அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.
இதன்மூலம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்திலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். அத்தகைய சூழ்நிலையில், உங்களிடம் ரேஷன் அட்டை இல்லை என்றால், கவலை வேண்டாம். வீட்டிலியே இருந்து ரேஷன் அட்டை ஆன்லைன் (Apply online for ration card) மூலம் விண்ணப்பித்து எளிதாகப் பெற முடியும்சி சி அதுக்குறித்து பார்ப்போம்.
ALSO READ | குடும்ப அட்டை - ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு செப்டம்பர் வரை நீட்டிப்பு
வீட்டிலிருந்த படியே விண்ணப்பிக்கலாம்:
உங்களிடம் இன்னும் ரேஷன் கார்டு இல்லையென்றால், இப்போது அதை ஆன்லைன் மூலம் (ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்) பெற்றுக்கொள்ளலாம். இதற்காக, அனைத்து மாநிலங்க அரசு தரப்பில் வலைத்தளம் (Website) தொடங்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கு ஏற்ப, அந்த மாநில வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிக்கவும்?
நீங்கள் முதலில் அந்தந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிட வேண்டும். ரேஷன் கார்டு பெற, அடையாள ஆதாரமாக ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட் கொடுக்க வேண்டும். ஒருவேளை இதில் எந்த ஆதாரமும் இல்லை என்றால், அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்த ஐ-கார்டு, ஹெல்த் கார்டு, ஓட்டுநர் உரிமத்தையும் வழங்கலாம்.
ALSO READ | வைரல்! குடும்ப ரேஷன் அட்டையில் இயேசுநாதர் உருவப்படம்!
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதோடு ஐந்து முதல் 45 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அது சரிபார்ப்புக்கு அனுப்பப்படுகிறது. படிவத்தில் நிரப்பப்பட்ட தகவல்களை சரிபார்த்து, அதன் பிறகு, உங்க வட்டார அதிகாரி உறுதி செய்கிறார்
30 நாட்கள் நேரம் எடுக்கும்
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டும். அனைத்து சரிபார்ப்பும் முடிந்தவுடன் ரேஷன் கார்டு 30 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது. இது தவிர, விண்ணப்பதாரர்கள் பொது சேவை மையத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்
நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய ரேஷன் கார்டுகளுக்கான அனைத்து மாநிலங்களின் போர்ட்டல்களும் உள்ளன. உங்கள் மொபைலில் அந்த போர்ட்டலை திறந்து, உங்களுக்கான குடும்ப அடையாள அட்டையை விண்ணப்பிக்கலாம்.
ALSO READ | மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளில் பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேன் முறை அமல்