காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
Benefits Of Drinking Water: காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Benefits Of Drinking Water: தினசரி காலையில் எழுந்ததும், இரவு தூங்கும் போதும் அல்லது இரவில் எழுந்தாலும் தண்ணீர் குடித்துவிட்டு படுப்பது சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். தண்ணீர் நம் தாக்கத்தை தனித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | Hair Loss: முடி உதிர்தலை உடனடியாக நிறுத்த உதவும் உணவுகள்!
இரவு முழுவதும் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்கி எழுவதால், உடலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இரவுகளில் வியர்வை மூலம் அதிக தண்ணீரை உடலில் இருந்து இழக்க நேரிடும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம், ஒருவரின் வளர்சிதை மாற்றத்தை 24 சதவீதம் அதிகப்படுத்தலாம் மற்றும் இது செரிமானத்தையும் மேம்படுத்தலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் வரலாம். வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்தை அதிகரிப்பதன் மூலம், காலையில் தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும்.
அதிக காரமான உணவுகளை உண்ணும்போது நெஞ்செரிச்சல் ஏற்படலாம். காலையில் எழுந்தவுடன் முதலில் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் இதனை கட்டுப்படுத்த உதவும். காலையில் தண்ணீர் குடிப்பதால், வயிற்றில் உள்ள நச்சுகள் வெளியேறி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இது ஒருவரின் நோய்வாய்ப்படுவதையும் தடுக்கலாம். மேலும், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கதண்ணீர் அருந்துவது அவசியம். நீங்கள் தோல் பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்கள் என்றால், தண்ணீர் குடிப்பது இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி சரி செய்ய உதவும். தண்ணீர் புதிய செல்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை பளபளக்கச் செய்யும். ஒவ்வொரு முடியிலும் 25 சதவீதம் தண்ணீர் உள்ளது. காலையில் முதலில் குடிப்பது முடியின் தரம் மற்றும் அமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தண்ணீர் குடிப்பது கூடுதல், மிகவும் தேவையான ஆற்றலைக் கொடுக்க உதவும்.
தண்ணீர் ஒரு சக்திவாய்ந்த இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியாக உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. தண்ணீர் அதிகம் குடிக்கும் போதெல்லாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். இந்த காரணத்திற்காக, வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது மற்றும் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது.
நீரிழப்பு என்பது சிலருக்கு தலைவலிக்கு ஒரு காரணமாகும், இதை தண்ணீர் குடிப்பதன் மூலம் தடுக்கலாம். தலைவலி தொடங்குவதற்கு முன்பே தவிர்க்க, காலை பொழுதை ஒரு கிளாஸ் தண்ணீரில் தொடங்கி, நாள் முழுவதும் தண்ணீரைப் பருகவும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உங்கள் இரத்த சிவப்பணுக்கள் வேகமாக வளர தூண்டும், இதன் விளைவாக உங்கள் இரத்த ஓட்டத்தில் அதிக ஆக்ஸிஜன் சப்ளை கிடைக்கும். இது உங்களை உற்சாகமாக உணர வைக்கும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம். கூடுதலாக, சிறுநீர்க்குழாய் தொற்றுகள் தடுக்கப்படுகின்றன.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)மேலும் படிக்க | தினசரி காலையில் நெய்யை இப்படி சாப்பிடுங்கள்! உடல் எடை எளிதில் குறையும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ