உடனே உங்கள் ஆதார் கார்டில் இதை அப்டேட் செய்யுங்கள்..இல்லையெனில்...

உங்கள் ஆதார் கார்டு அப்டேட் செய்யப்படவில்லை என்றால், அரசு மற்றும் அரசு சாரா திட்டங்களின் பலன்கள் ரத்து செய்யப்படும் என்று UIDAI தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் அதாவது UIDAI ஆதார் கார்டு தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, நீங்கள் ஏதேனும் அரசு அல்லது அரசு சாரா திட்டத்தின் பலன்களைப் பெற விரும்பினால், ஆதார் கார்டில் 'POI' மற்றும் 'POA' ஆகியவற்றைப் அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் 'POI' மற்றும் 'POA' அப்டேட் செய்யப்படவில்லை என்றால், உடனேயாக அதை அப்டேட் செய்யவும். அதன்படி ஆன்லைனில் அப்டேட் செய்வதற்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும். அதுவே ஆஃப்லைனில் செய்யப்பட்டால் கட்டணம் ரூ.50 ஆக செலுத்த வேண்டும். எனவே இப்போது நாம் எவ்வாறு அப்டேட் செய்வது என்பதை பார்போம்.
POI அப்டேடுக்கு என்ன தேவை?
'POI' மற்றும் 'POA' ஆகியவை அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று என்றும் அழைக்கப்படுகின்றன. ஜூலை 1, 2022 அன்று ஆதார் வெளியிட்ட அறிவிப்பின்படி, அடையாளச் சான்றுக்கு அதாவது POI அப்டேடுக்கு பெயர் மற்றும் புகைப்படம் அடங்கிய ஆவணம் தேவை. இதற்கு பான் கார்டு, இ-பான், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆயுத உரிமம், போட்டோ வங்கி ஏடிஎம் கார்டு, போட்டோ கிரெடிட் கார்டு, திருமணச் சான்றிதழ், விவசாயி புகைப்படம் பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களின் உபயோகிக்கலாம்.
POA அப்டேடுக்கு என்ன ஆவணங்கள் தேவை?
மதுபுரம் முகவரிக்கான சான்றுக்கு அதாவது POA அப்டேடுக்கு, உங்கள் பெயர் மற்றும் முகவரியைக் கொண்ட ஆவணம் தேவை. இதற்கான பாஸ்போர்ட், வங்கி அறிக்கை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஓய்வூதிய அட்டை, கிசான் பாஸ்புக், ஊனமுற்றோர் அட்டை, எம்என்ஆர்இஜிஏ அட்டை, செல்லுபடியாகும் பள்ளி அடையாள அட்டை, பள்ளி விடுப்பு சான்றிதழ், மின் கட்டணம், தண்ணீர் பில், லேண்ட்லைன் டெலிபோன் பில், போஸ்ட்பெய்ட் மொபைல் பில் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
ஆதார் கார்டு அப்டேடிற்கான கட்டணம் என்ன?
இந்த நிலையில் உங்களின் ஆதார் கார்டில் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி மற்றும் மொழி ஆகியவற்றில் மாற்றம் இருந்தால், அவை ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியும். இருப்பினும், ஆன்லைன் அப்டேடுக்கு பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை வைத்திருப்பது கட்டாயமாகும். மேலும் ஆன்லைன் அப்டேடிற்கான கட்டணம் ரூ.25 ஆகும். அதே சமயம் புகைப்படம் மற்றும் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க வேண்டும் என்றால், ஆஃப்லைனில் 50 ரூபாய் கட்டணமாக செலுத்தி அப்டேட் செய்துக் கொள்ளலாம்.