உரிமையை கர்நாடாக அரசு ரத்து செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக Ola cab நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த உரிமத்தை கர்நாடக அரசு ரத்து செய்து அதிரடி உத்தரவு பிரப்பித்துள்ளது. இதனால், அடுத்த 6 மாதங்களுக்கு கர்நாடகாவில் Ola cab-கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கேப் நிறுவனமான Ola cab, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு, மும்பையில் துவக்கப்பட்ட Ola cab நிறுவனம், தற்போது  பெங்களூரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 


இந்த நிலையில் தற்போது Ola cab நிறுவனத்துக்கு வழங்கிய உரிமத்தை பெங்களூரு போக்குவரத்துத் துறை ரத்து செய்துள்ளது. 


பெங்களூருவில் Ola cab நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த உரிமத்தில், 'பைக் டேக்சி'க்கள் இயக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், அதை மீறி, Ola cab நிறுவனம் பைக் டேக்சி சேவையை பெங்களூருவில் வழங்கி வந்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் விதிகளை மீறி நடந்து கொண்டதை கண்டறிந்து விளக்கம் கேட்டதாகவும், அதற்கு Ola cab நிறுவனம் வழங்கிய விளக்கம் போதுமானதாக இல்லை என்றும் கர்நாடக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 


இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் Ola cab-க்கு வழங்கி வந்த உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு, 6 மாதங்களுக்கு ஓலா கேப்கள் கர்நாடகாவில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஹூப்லி ஆகிய நகரங்களில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட ஓலா கேப்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 


இதற்கிடையில் இதுகுறித்து Ola cab நிறுவனத்திடம் கேட்கையில்., இதுகுறித்து தற்போது தான் நாங்களே அறிகிறோம். முறையான ஆவணம் இன்னும் வரவில்லை, வந்தபின் பிரிசீலினை செய்து பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம் என தெரிவித்துள்ளது.