சிறந்த கிரெடிட் கார்டுகள்: பலருக்கு திரைப்படங்களைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். தற்போது கொரோனாவின் ஆபத்து குறைந்து வருவதால், மக்கள் படம் ரிலீஸ் ஆன உடனேயே தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபகாலமாக பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைத்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்களும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேளிக்கையில் நேரம் செலவிடும் பழக்கத்தையும்,  திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கத்தையும் கொண்டிருந்தால், இந்த 5 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெறலாம். 


1. எச்டிஎஃப்சி வங்கி டைம்ஸ் பிளாட்டினம் கிரெடிட் கார்டு
 
ஹெச்டிஎஃப்சி அறிமுகப்படுத்திய டைம்ஸ் பிளாட்டினம் கிரெடிட் கார்டு உணவு மற்றும் பொழுதுபோக்கிற்கான சிறந்த அட்டையாகும். நீங்கள் அடிக்கடி கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவும், திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் கொண்டவராகவும் இருந்தால், இந்த கார்டை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இங்கு வாடிக்கையாளர்கள் 150 ரூபாய்க்கு 3 ரிவார்டு புள்ளிகளையும், உணவுக்காக செலவழித்த ஒவ்வொரு 150 ரூபாய்க்கும் 10 ரிவார்டு புள்ளிகளையும் பெறுகிறார்கள்.


ஆண்டு கட்டணம் - ரூ. 1,000
பொழுதுபோக்கு நன்மைகள் - BookMyShow மூலம் திரைப்பட டிக்கெட்டுகளை புக் செய்தால், 25% தள்ளுபடி (ஒரு பரிவர்த்தனைக்கு ₹350 வரை சேமிக்கலாம்).
தேவையான குறைந்தபட்ச வருமானம் - மாதத்திற்கு ரூ.30,000


2. ஆக்சிஸ் வங்கி மை ஜோன் கிரெடிட் கார்ட் 


ரூ.500 வருடாந்திர கட்டணத்துடன் வரும் இந்த கார்டில், மூவி டிக்கெட் கேஷ்பேக், விமான நிலையத்தில் இலவச லவுஞ்ச் அணுகல் மற்றும் மிந்த்ரா போன்ற இ-காமர்ஸ் இணையதளங்களில் நல்ல தள்ளுபடி ஆகியவை கிடைக்கின்றன. மிந்த்ராவிலிருந்து வாங்கும் போது ரூ.1,000 தள்ளுபடி மற்றும் ஒவ்வொரு ரூ.200க்கு 4 ரிவார்டு புள்ளிகள் போன்ற சலுகைகள் உள்ளன.


ஆண்டு கட்டணம் - ரூ. 500
பொழுதுபோக்கு நன்மை - பேடிஎம் மூலம் புக் செய்யும் திரைப்பட டிக்கெட்டுகளுக்கு 25% கேஷ்பேக் (அதிகபட்சமாக ₹100 கேஷ்பேக் பெறலாம்)
குறைந்தபட்ச வருமானம் - சோர்சிங்க் நேரத்தில் தீர்மானிக்கப்படும்.


மேலும் படிக்க | Post Office FD: அதிக வருமானம் கொடுக்கும் அஞ்சலக FD திட்டம்  


3. ஆக்சிஸ் வங்கி நியோ கிரெடிட் கார்டு


ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார்டில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கே வாடிக்கையாளர்களுக்கு முதல் பரிவர்த்தனைக்கு ரூ.250 அமேசான் கிஃப்ட் வவுச்சரும், புக் மை ஷோவிலிருந்து ரூ.300க்கான வரவேற்பு பரிசு வவுச்சரும் வழங்கப்படுகிறது. இது தவிர, வாடிக்கையாளர்கள் உணவு டெலிவரிக்கு ஜொமேடோவில் 40% தள்ளுபடி, பேடிஎம் மூலம் யூட்டிலிட்டி பில் செலுத்துவதில் 5%, மளிகைப் பொருட்களுக்கு க்ரோஃபர்சில் 10% தள்ளுபடி போன்ற பலன்களைப் பெறுகிறார்கள்.


ஆண்டு கட்டணம் - ரூ. 250
பொழுதுபோக்கு நன்மைகள் - புக்மைஷோ மூலம் திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் 10% தள்ளுபடி (அதிகபட்சம் மாதத்திற்கு ₹100 தள்ளுபடி)
குறைந்தபட்ச வருமானம் - சோர்சிங்கின் போது தீர்மானிக்கப்படும்.


4. ஆர்பிஎல் பாப்கார்ன் கிரெடிட் கார்டு
இது ஒரு நுழைவு நிலை அட்டையாகும். இதில் நீங்கள் மாதத்திற்கு ரூ.5,000 செலவில் 2 இலவச திரைப்பட டிக்கெட்டுகளைப் பெறுவீர்கள். இதில் வாடிக்கையாளர்களுக்கு புக் மை ஷோவில் ஒரு மாதத்தில் ₹1,000 வெல்கம் பெனிஃபிட், ரூ.5,000 செலவு செய்தால் மூவி டிக்கெட்டில் ரூ. 500 தள்ளூபடி அல்லது அதிகபட்சம் 2 திரைப்பட டிக்கெட்டுகள், இரண்டில் எது குறைவோ அது கிடைக்கும். 


ஆண்டு கட்டணம் - ரூ. 1,000
பொழுதுபோக்கு நன்மை – புக்மைஷோ-இல் 4 மூவி டிக்கெட்டுக்கு ரூ. 1,000 வெல்கம் கிஃப்ட் 
குறைந்தபட்ச வருமானம் - மாதத்திற்கு ரூ. 25,000
 


5. சிட்டி பேங்க் கேஷ்பேக் கிரெடிட் கார்டு


இந்த கார்டில், ரிவார்டு புள்ளிகளுக்குப் பதிலாக நேரடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இது, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளில் கேஷ்பேக்கை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் பிற கட்டணங்கள் மற்றும் திரைப்பட டிக்கெட்டுகளில் 5% கேஷ்பேக் கிடைக்கும். மற்ற அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 0.5% கேஷ்பேக் கிடைக்கும்.


ஆண்டு கட்டணம் - ரூ. 500
பொழுதுபோக்கு நன்மை - திரைப்பட டிக்கெட்டுகளுக்கு 5% கேஷ்பேக்
குறைந்தபட்ச வருமானம் - சோர்சிங்கின் போது நிர்ணயிக்கப்படும்.


மேலும் படிக்க | EPFO ஓய்வூதியத் திட்டம்: இனி ஓய்வூதியம் இரட்டிப்பாக்கப்படும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR