தபால் அலுவலகம் நிலையான வைப்புத் திட்டங்கள்: இந்திய அஞ்சல் அலுவலகம் அதன் வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருகிறது. நாட்டில் அதிக அளவில் உள்ள நடுத்தர வர்க்கம் என்றுமே, சந்தை அபாய திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவதில்லை. சந்தை அபாயத்திலிருந்து விலகி இருக்கும் முதலீட்டு திட்டங்களே அவர்கள் முதல் தேர்வாக உள்ளது. அந்த வகையில், அஞ்சல் அலுவலகத்தின் நிலையான வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்வது, நல்ல வருமானத்துடன் பாதுகாப்பான முதலீடாக உள்ளது.
வங்கிகளும் நிலையான வைப்புத்தொகை திட்டங்களை வழங்கினாலும், அவற்றின் வட்டி விகிதங்கள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் போஸ்ட் ஆபீஸ் எஃப்டி முதலீட்டில், அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் அதிக வருமானத்தைப் பெறுகிறார்கள். போஸ்ட் ஆபீஸ் எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டால், இந்தத் திட்டத்தைப் பற்றிய சில விவரங்களை தெரிந்து கொள்வோம் :
போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் முதலீட்டு காலம்
நிலையான வைப்பு திட்ட காலம் குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் அளித்துள்ள தபால் துறை, தபால் அலுவலகத்தில் எஃப்டி முதலீட்டி திட்டத்தில் சேர்வது மிகவும் எளிதான செயல் என்று கூறியுள்ளது. இதில், 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டு காலம் வரை FD செய்யலாம்.
மேலும் படிக்க | எதற்காக டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை நாம் எடுக்க வேண்டும்?
அஞ்சலக FDயில் கிடைக்கும் வட்டி
அஞ்சல் அலுவலகத்தில் 7 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான எஃப்டிகளுக்கு 5.50 சதவீத வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், 1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD முதலீட்டு திட்டங்களுக்கு 5.50 சதவிகிதம் வட்டி விகிதம் கிடைக்கும். அதே நேரத்தில், 3 ஆண்டு FDக்கு 5.50 சதவீத வட்டி விகிதமும், 3 முதல் 5 வருட FD திட்டங்களுக்கு 6.70 சதவீத வட்டியும் கிடைக்கும்.
அஞ்சல் அலுவலக FDயில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
1. சந்தை அபாயம் இல்லதா திட்டத்தில் முதலீடு செய்வது ச மிகவும் பாதுகாப்பானது.
2. நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை வசதிகளும் கிடக்கும்.
3. இத்திட்டத்தின் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
4. 5 வருட FD திட்டத்தில் முதலீடு செய்தால் வருமான வரியின் 80C பிரிவின் கீழ் விலக்கு பெறலாம்.
தபால் அலுவலக FD கணக்கை எவ்வாறு திறப்பது
அஞ்சலகத்தில் FD கணக்கை திறக்க, உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் செல்லலாம். எஃப்டியைத் திறக்க குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீடு செய்ய வேண்டும். 100-ன் மடங்குகளில் மட்டுமே நீங்கள் FD இல் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR