பெண்களுக்கான 5 சிறந்த ஓய்வூதியத் திட்டங்கள்: பெண்கள் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாறி வருகின்றனர். அவர்கள் தங்கள் தேவைகளுக்காக தங்கள் கணவர் அல்லது குழந்தைகளை அணுக வேண்டியதில்லை. ஓய்வுக்குப் பிறகும் தன்னிறைவு வாழ்க்கை வாழ, முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். அதனால் முதுமையில் சிறு தேவைகளுக்காக யாரிடமும் கை நீட்ட வேண்டியதில்லை. இதுபோன்ற பல திட்டங்கள் உள்ளன, அவற்றைப் பயன்படுத்தி வழக்கமான ஓய்வூதியத்தைப் (Pension Plans) பெறலாம். மேலும் நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு எளிதாக இருக்கும். அதுமட்டுமின்றி உங்கள் செலவுகள் மற்றும் வருமானத்தை கருத்தில் கொண்டு உங்கள் ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் இன்று நாம் பெண்களுக்கான சிறந்த ஓய்வூதியத் திட்டங்கள் எவை என்பதையும், அவற்றில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவையே பெண்களுக்கான 5 சிறந்த ஓய்வூதியத் திட்டங்களாகும்:


ULIP திட்டம் (Unit Linked Insurance Plan):
யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான் (ULIP Plan - Unit linked Insurance Plan) பெண்களுக்கு சிறந்த முதலீட்டுத் தேர்வாக அமையும். இந்த திட்டத்தில், ஆயுள் காப்பீட்டுடன், முதலீட்டு வசதியும் உள்ளது. மெச்சூரிட்டி அடைந்த பிறகு, வழக்கமான ஓய்வூதியத்தின் பலன் கிடைக்கும். எல்ஐசி உட்பட பல காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது யூலிப் திட்டங்களை இயக்கி வருகின்றன. மேஉமி இந்த யூலிப் என்கிற யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பாலிசி என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டும் காப்பீடுடன் கூடிய முதலீட்டுத்திட்டமாகும். மேலும் ஐந்து ஆண்டு லாக் இன் காலத்துடன் கூடிய யூலிப் பாலிசிக்கு செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. 


மேலும் படிக்க | வங்கியின் ஜாக்பாட் பரிசு... அதிக வட்டியுடன், கணக்கில் அதிக பணம் கிடைக்கும்


மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund):
மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் வலுவான வருமானத்தைப் பெறலாம். SIP இன் கீழ் நீங்கள் மாதாந்திர பிரீமியத்தை செலுத்தலாம். அதே நேரத்தில், SWP மூலம், நீங்கள் வருமானம் பெறலாம், அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வூதியம் பெறலாம்.


அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana):
அடல் பென்ஷன் யோஜனா முதலீட்டுக்கான சிறந்த தேர்வாகவும். வருமானம் அதிகமாக இல்லாதவர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் பயன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ், 60 வயதை எட்டிய பிறகு, 1000 முதல் 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவார்கள்.


தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme):
தேசிய ஓய்வூதியத் திட்டம் பெண்களுக்கான சிறந்த ஓய்வூதியத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தில் முதலீடு மற்றும் வயது அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கும். ஒரு பெண் தனது 30 வயதில் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் முதலீடு செய்தால், 60 வயதை முடித்த பிறகு, அந்த பெண்ணுக்கு சுமார் 45,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.


எல்ஐசி ஜீவன் அக்ஷய் 7 ஓய்வூதியத் திட்டம் (LIC Jeevan Akshay 7 Pension Plan):
எல்ஐசியின் இந்த ஆண்டுத் திட்டம் முதலீட்டுக்கான சிறந்த தேர்வாகவும் அமையும். பாலிசியை 30 வயதில் வாங்கலாம். குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூ.1 லட்சம் ஆகும். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு எதுவும் கிடையாது.


மேலும் படிக்க | ரூ.5,ரூ.10, ரூ.20 நாணயங்கள்: ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ