‘என் இனிய தனிமையே..’தனியாக பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவான இடங்கள்
‘என் இனிய தனிமையே..’தனியாக பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவான இடங்கள்
நம்மில் பலருக்கு பயணம் மேற்கொள்வதென்றால் மிகவும் பிடிக்கும். நண்பர்கள், உறவினர்களுடன் பயணம் செல்லும் போது இல்லாத புது அனுபவம் நம் தனியாக பயணம் மேற்கொள்ளும் போது கிடைக்கும். இப்படி தனியாக பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கு ஏதுவாக இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்கள் என்னென்ன தெரியுமா?
புதுச்சேரி:
சென்னையிலிருந்து 4-5 மணி நேரத்தில் புதுச்சேரிக்கு சென்றுவிடலாம். இங்கே சுற்றிபார்ப்பதற்கென்று நிறைய அழகான இடங்கள் உள்ளன. சிலர் வார இறுதியானால் போதும், இங்கு சென்றுவிடுவர். திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஜோடிகள் பலர் இங்குள்ள இடங்களுக்கு சென்று போட்டோ ஷூட் செய்வர். நீங்கள் பின்வரும் இடங்களை தனியாகவே சென்று சுற்றிப்பார்க்கலாம்.
-
பாரடைஸ் பீச்
-
பாண்டிச்சேரி பொட்டானிக்கல் கார்டன்
-
காத்ரீடல் தேவாலயம்
-
ஆரோவில் ஆசிரமம்
-
கலங்கரை விளக்கம்
-
ஃப்ரெஞ்சு போர் சின்னம்
-
பிச்சாவரம் மாங்குரூவ் காடுகளிவல் படகு பயணம்
மேலும் படிக்க | புத்தக விரும்பிகளே..நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய 8 புத்தகங்கள்
வர்கலா-கேரளா:
கடவுளின் சொந்த நாடு என அழைக்கப்படும் கேரளாவில் உள்ள வர்கலா, இந்தியாவில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களுள் ஒன்று. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகருக்கு கோடை விடுமுறை நாட்களில் பலர் படையெடுத்து செல்வர். இங்கு எந்தெந்த இடங்களை சுற்றி பார்க்கலாம் தெரியுமா?
-
வர்கலா கடற்கரை
-
சிவகிரி மடம்
-
வர்கலா பாறை
-
வர்கலா சுரங்கப்பாதை
மணாலி-இமாச்சல பிரதேசம்:
இயற்கை அழகை விரும்புவோருக்கு மிகப்பெரிய ஜாக்பாட், குலி மணாலி. இமாச்சல பிரதேச பகுதியில் உள்ள இந்த இடத்தில் உள்ள பணி மலைகள் பார்ப்பதற்கு கொள்ள அழகாக இருக்கும். இங்கு இந்தி மற்றும் பஞ்சாபி பேசும் மக்கள் அதிகம் உள்ளனர். இவர்களில் பலர் ஆங்கிலத்திலும் பேசுவர். இங்கு, குடும்பத்தினருடன் கூட்டாக பயணம் செய்பவர்களும், தேனிலவு சுற்றுலாவிற்கு வரும் ஜோடிகளும் அதிகம் காணப்படுவர். இன்னும் சிலர் இங்கு தனியாக பயணம் மேற்கொள்வர். மணாலியில் அப்படி எத்தனை இடங்கள்தான் சுற்றிப்பார்ப்பதற்கு உள்ளது?
-
தேவி கோயில்
-
இமாச்சலின் கலாச்சார அருங்காட்சியகம்
-
சோலாங்கில் பாரா க்லைடிங்
-
ஜோகினி நீர் வீழ்ச்சி
-
மலையேற்றம்
தாஜ் மகால்-ஆக்ரா:
உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அளப்பறிய காதலின் நினைவு சின்னமாகவும் திகழ்வது தாஜ்மகால். டெல்லியில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ள இந்த இடத்தை காண்பதற்கு தினம் தோறும் கூட்டம் வந்தவாறு இருக்கும். இந்த தாஜ் மகாலின் கட்டட வடிவமைப்பை பார்ப்பதற்கும் உட்புற கட்டமைப்பை பார்ப்பதற்கும் பலர் இங்கு வந்து செல்கின்றனர். இந்தியவிற்கு வரும் வெளிநாட்டினர்களில் பலர் தாஜ் மகாலிற்கு விசிட் அடிப்பதை தவறுவதில்லை.
லடாக்:
இந்தியாவின் எல்லைப்பகுதிக்கு மிக அருகில் உள்ள லடாக்கிற்கு சமீப காலமாக சிலர் பைக்குடன் படையெடுத்து வருகின்றனர். இயற்கை சுவாசத்திற்காகவும் புதுவித அனுபவத்திற்காகவும் பல இளைஞர்கள் இந்த இடத்திற்கு வந்து செல்கின்றனர். ஹரிஷ் கல்யாண், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் காதல் தோல்விக்கு பிறகு லடாக் செல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அதன் பிறகு காதல் தோல்வியடைந்த பல இளைஞர்கள் லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டு வருவதாக ஒரு சிலர் தெரிவிக்கின்றனர்.
லடாக்கில் சுற்றிப்பார்ப்பதற்கான இடங்கள்
-
நுர்பா பள்ளத்தாக்கு
-
லே பாலஸ்
-
கார்கில்
-
சன்ஸ்கார்
-
காந்தமலை
-
ஸ்டோக் பாலஸ்
மேற்கூறிய இடங்களுக்கு தனியாக பயணம் மேற்காெண்டாலும், உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது உங்கள் கடமையாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ