Best Recharge Plans: அதிகரித்து வரும் இணைய பயன்பாடு காரணமாக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல சிறந்த திட்டங்களை தினமும் அறிமுகப்படுத்துகின்றன. இந்த திட்டங்களில் தரவு, வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களின் சிறந்த திட்டங்களைப் பற்றி இங்கே காணலாம். இவற்றில் நீங்கள் தினமும் 1.5 ஜிபி தரவைப் பெறுவீர்கள். இதனுடன், இந்த திட்டத்தில் நீங்கள் இன்னும் பல நன்மைகளையும் பெற முடியும். அவற்றின் முழுமையான விவரங்களை இங்கே காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோவின் தினமும் 1.5 ஜிபி தரவுத் திட்டம் - தினமும் 1.5 ஜிபி தரவு கிடைக்கும் பல திட்டங்களை நீங்கள் ஜியோவில் (Jio) பெற முடியும். ரூ 199, ரூ .939, ரூ .555 முதல் ரூ 2121 வரை வெவ்வேறு வேலிடிட்டியுடன் (செல்லுபடி காலம்) கூடிய திட்டங்களை நீங்கள் பெற முடியும். இந்த அனைத்து திட்டங்களிலும், உங்களுக்கு தினமும் 1.5 ஜிபி தரவு கிடைக்கும். இந்த திட்டங்களில் முறையே 28 நாட்கள், 56 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 336 நாட்களுக்கான வேலிடிட்டி கிடைக்கும். இந்த அனைத்து திட்டங்களிலும், வரம்பற்ற அழைப்பு வசதி, பிற நெட்வொர்க்குகளில் அழைப்பதற்கு 1000 நிமிடங்கள், 2000 நிமிடங்கள், 3000 நிமிடங்கள், 12000 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன.


வோடபோனின் தினமும் 1.5 ஜிபி தரவுத் திட்டம் - நீங்கள் வோடபோனின் (Vodafone) ரூ .249, ரூ. 399, ரூ .599 மற்றும் ரூ .2399 மதிப்பிலான திட்டங்களைப் பெறலாம். இந்த திட்டங்களில், உங்களுக்கு முறையே 28 நாட்கள், 56 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்களுக்கான வேலிடிட்டி கிடைக்கும். இந்த அனைத்து திட்டங்களிலும் உங்களுக்கு 1.5ஜிபி தரவு கிடைக்கும். இது தவிர, அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும். 


ALSO READ: Smartphone Hacks: தொலைந்து போன ஸ்மார்ட்போனை எவ்வாறு பெறுவது?
ஏர்டெல்லின் தினமும் 1.5 ஜிபி தரவுத் திட்டம் - தினசரி 1.5 ஜிபி தரவுத் திட்டத்தில், ஏர்டெல் (Airtel) திட்டங்களில் நீங்கள் ரூ .249, ரூ .279, ரூ .297, ரூ. 399, ரூ .497, ரூ .598 மற்றும் ரூ 2398 மதிப்பிலான திட்டங்களைப் பெறலாம். இதில் ரூ. 249, ரூ. 279 மற்றும் ரூ. 297 திட்டங்களின் செல்லுபடியாகும் தன்மை 28 நாட்களாகும். ரூ .939 மற்றும் ரூ .497 திட்டங்களின் செல்லுபடியாகும் தன்மை 56 நாட்களாகும். ரூ .598 திட்டத்திற்கு 84 நாட்களும் ரூ 2398 திட்டத்திற்கு 365 நாட்களும் வேலிடிட்டி அளிக்கப்படுகிறது. இந்த அனைத்து திட்டங்களிலும் வரம்பற்ற அழைப்பு வசதியையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.


ALSO READ: அறிமுகத்துக்கு முன்னர் ‘லீக்’ ஆனது Samsung Galaxy A52 5G படங்கள், விலை பிற விவரங்கள் இதோ


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR