அறிமுகத்துக்கு முன்னர் ‘லீக்’ ஆனது Samsung Galaxy A52 5G படங்கள், விலை பிற விவரங்கள் இதோ

புதிய சாம்சங் கேலக்ஸி A52 5G-யில், 6.5 இன்ச் திரை இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் FHD + ரெசல்யூஷனுடன் Infinity-O Super AMOLED டிஸ்ப்ளே கிடைக்கும். இது தவிர, 4,500 mAh வலுவான பேட்டரியும் இந்த தொலைபேசியில் கிடைக்கும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 17, 2021, 03:25 PM IST
  • புதிய சாம்சங் கேலக்ஸி A52 5G தொலைபேசி பற்றிய தகவல்கள் பிரான்சின் அமேசான் தளத்தில் கசிந்துள்ளன.
    இந்தியாவில் இந்த தொலைபேசியின் விலை 26-27 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம்.
    புதிய சாம்சங் கேலக்ஸி A52 5G-யில் நான்கு பின்புற கேமராக்கள் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிமுகத்துக்கு முன்னர் ‘லீக்’ ஆனது Samsung Galaxy A52 5G படங்கள், விலை பிற விவரங்கள் இதோ   title=

சாம்சங் அறிமுகப்படுத்தும் புதிய தொலைபேசியின் படங்கள் கசிந்துள்ளன. நிறுவனம் தனது புதிய முதன்மை ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி A52 5G ஃபோனை அறிமுகம் செய்யவிருந்த ஒரு நாளைக்கு முன்னர் இந்த படங்கள் கசிந்தன. ஈ-காமர்ஸ் தளமான அமேசான் இந்த தொலைபேசியை தனது தளத்தில் தவறுதலாக பட்டியலிட்டது. 

சாம்சங் கேலக்ஸி A52 5G-யின் படங்கள் எவ்வாறு கசிந்தன?

எங்கள் இணை வலைத்தளமான bgr.in இன் படி, சாம்சங் (Samsung) கேலக்ஸி A52 5G இன் படங்கள் லீக் ஆன விஷயத்தை இவான் பிளாஸ் கண்டறிந்தார். சாம்சங் கேலக்ஸி A52 5G யின் இரண்டு சாதனங்களின் விவரக்குறிப்பு மற்றும் விலை பற்றிய தகவல்களையும் இவான் வழங்கியுள்ளார்.

புதிய சாம்சங் கேலக்ஸி A52 5G-யில், 6.5 இன்ச் திரை இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் FHD + ரெசல்யூஷனுடன்Infinity-O Super AMOLED டிஸ்ப்ளே கிடைக்கும். இது தவிர, 4,500 mAh வலுவான பேட்டரியும் இந்த தொலைபேசியில் கிடைக்கும்.

ALSO READ: Contactless Payment: இனி கார்டோ, பணமோ வேண்டாம், பணம் செலுத்த watch இருந்தால் போதும்

சாம்சங் கேலக்ஸி A52 5G-யின் பிராசசர்
கசிந்த தகவல்களில் சாம்சங் கேலக்ஸி A52 5G-யின் (Samsung Galaxy) பிராசசர் பற்றிய தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு ஆக்டா கோர் பிராசசர் இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொலைபேசி 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் மெமரியுடன் வரும். தொலைபேசியை 1TB வரை விரிவாக்க முடியும்.

இந்த தொலைபேசி அபாரமான கேமராவைக் கொண்டுள்ளது 
சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போனில் (Smartphone), நீங்கள் ஒரு சிறந்த கேமராவையும் பெறப் போகிறீர்கள். புதிய சாம்சங் கேலக்ஸி  A52 5G-யில் நான்கு பின்புற கேமராக்கள் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரதான கேமரா 64 மெகாபிக்சல்களைக் கொண்டிருக்கும். 

விலை  விவரம்

புதிய சாம்சங் கேலக்ஸி A52 5G தொலைபேசி பற்றிய தகவல்கள் பிரான்சின் அமேசான் தளத்தில் கசிந்துள்ளன. கசிந்த தகவல்களின் படி, புதிய சாம்சங் கேலக்ஸி A52 5G-யின் விலை 507.49 யூரோ (சுமார் 43,800 ரூபாய்) என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், MySmartPrice-ன் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் இந்த தொலைபேசியின் விலை 26-27 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம். 

ALSO READ: Airtel வழங்கும் அசத்தலான 4-IN-1 Family Plan, 500GB Data, Data Add on திட்டம்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News