பொங்கல் வைக்க சரியான நேரம்! மகிழ்ச்சி மட்டுமல்ல லக்ஷ்மியும் வரும்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வரும் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்நாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா ஜனவரி 15 ஆம் தேதி, வரும் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து வீடுகளிலும் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பொங்கல் வைப்பது எப்படி? பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? என்பதையெல்லாம் மக்கள் தேடிதேடி தெரிந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் விழாவாக கொண்டாடப்படும் நிலையில், வடமாநிலங்களில் மகரசங்கராந்தி என கொண்டாப்படுகிறது. இந் நன்நாளில் விவசாயத்துக்கு உதவிய சூரிய கடவுளுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு, விழா எடுத்து தமிழர்களால் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
தை மாதம் பிறப்பு
தமிழ் மாதமான தை மாதம் ஒன்றாம் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தை மாத பிறப்பு பொறுத்த வரை சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க துவங்குதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.
2023 ம் ஆண்டு பொங்கல் விழா ஜனவரி 15 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஜனவரி 14 ம் தேதி போகிப் பொங்கல், ஜனவரி 15 ம் தேதி சூரிய பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
மேலும் படிக்க | பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள்! புக்கிங் செய்வது எப்படி?
பொங்கல் வைக்க நல்ல நேரம் :
ஜனவரி 15 :
நல்ல நேரம் - காலை 07.30 மணி முதல் 08.30 வரை
மாலை 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் - காலை 10.30 முதல் 11.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
பொங்கல் வைக்க நல்ல நேரம்:
பொங்கல் வைக்க சரியான நேரம் - காலை 07.45 முதல் 08.45 வரை
வெளிநாடுகளில் இருப்பவர்கள், காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும், மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் :
ஜனவரி 16 : காலை 06.30 முதல் 07.30 வரை, மாலை 04.30 முதல் 05.30 வரை
மேலும் படிக்க | சமைத்த உணவை எவ்வளவு நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ