மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் விரும்பும் மார்கழி மாதத்தின் இறுதி நாள் இன்று. போகி பண்டிகையோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திரனுக்கு "போகி' என்றும் ஒரு பெயர் உண்டு தெரியுமா? இந்து மதத்தின் வேதங்களில் இந்திரனை பற்றிய பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.


மழைக்கு அதிபதியான கடவுளான வருணன் என்றால். அவருக்கு அரசனாகத் திகழ்ந்து மழை பொழிவதை இயக்குபவர் இந்திரன். 


மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று வணங்கி வழிபடும் வழக்கம் இருந்தது.


ALSO READ | இன்னும் 2 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாக மாறும்


அதனாலும் போகி என்ற பெயரில் மார்கழி மாதத்தின் இறுதிநாள் அனுசரிக்கப்பட்டது. தற்போது, கொண்டாடப்படும் போகிப் பண்டிகையானது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' (Bhogi Festival) என்ற தத்துவத்தில் கொண்டாடப்படுகிறது.


மார்கழி மாதத்தில் அதிகாலையில் விழிந்த்தெழுந்து பூஜை, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. தேவர்களின் அதிகாலையாக மார்கழி மாதம் அமைந்துள்ளது. 


அந்த சமயத்தில் பூஜை, வழிபாடு போன்றவற்றை செய்வது நல்லது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மார்கழி மாதத்தில் சுப காரியங்கள் எதையும் செய்யாமல், வழிபாட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் வழக்கம் இந்தியா முழுவதும் காண முடியும்.


மார்கழி மாதம் பக்தி செய்வதற்கான மாதம், இம்மாதத்தின் இறுதிநாளில் பக்தியின் உச்சமான நாளாக கருதப்பட்டு, பூஜைகளும் சடங்களும் செய்யப்படுகின்றன.


ALSO READ | 100 இளைஞர்களை கொடுங்கள், இந்தியாவை மாற்றி காட்டுகிறேன்


நாளை பிறக்கும் புதிய மாதமான தை மாதத்தை மங்களமான மாதமாக வரவேற்கும் நாள் Bhogi Festival இன்று. மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 


போகி பண்டிகையன்று, இந்திரன் உள்ளிட்ட தெய்வங்களை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள். காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் விசேஷம்.


பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகையன்று, தேவையற்ற பழைய பொருட்களை எரித்து, புதியவற்றை புழக்கத்திற்கு கொண்டு வருவது வழக்கம். 


பழைய சிந்தனைகளையும், தேவையற்ற மன அழுக்கையும் போகியில் போக்கிவிட்டு, புதிய எண்ணத்துடன் தையை வரவேற்போம்.  


ALSO READ | மேற்கு வங்க மண்ணில் உதித்த ஞான சூரியன் விவேகானந்தர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR