SBI Credit Card: புதுடெல்லி: எஸ்பிஐயின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய செய்தி. நீங்களும் எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் (SBI Credit Card) பயன்படுத்தினால், இந்தச் செய்தியில் பெரிய அதிர்ச்சியைப் தறலாம். நாளை, அதாவது டிசம்பர் 1 முதல், எஸ்பிஐ வங்கி (State Bank of India) தனது வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு பிராசஸிங் கட்டணமும் (Processing fee), வரியும் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டு EMI கட்டணங்களுக்கு 99 ரூபாய் பிராசஸிங் கட்டணமும், வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேரடி ஷாப்பிங் போதும், ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping) போதும் செய்யப்படும் வர்த்தகங்களுக்கு கிரெடிட் கார்டு (Credit Card) பயன்படுத்தி கட்டணம் செலுத்தியிருந்தால், EMI கட்டணங்களுக்கு பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.


ALSO READ: Home Loan Interest: குறைந்த வட்டி; வீட்டு கடனில் கலக்கும் பிரபல வங்கிகள் 


 


இதுகுறித்து எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, எல்லா EMI கட்டணங்களுக்கும் வட்டியுடன் சேர்த்து 99 ரூபாய் பிராசஸிங் கட்டணமும், வரியும் செலுத்த வேண்டும். புதிய விதியின்படி, டிசம்பர் 1 க்கு முன் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு  இந்தச் பிராசஸிங் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.


இது சம்பந்தமாக, ஆன்லைன் EMI பரிவர்த்தனைகளுக்கு, நிறுவனம் செலுத்தும் பக்கத்தில் பிராசஸிங் கட்டணம் பற்றிய தகவலை வழங்கும். உங்கள் EMI பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டால், பிராசஸிங் கட்டணம் திரும்பப் பெறப்படும். இருப்பினும், முன்கூட்டியே மூடப்பட்டால் அது திரும்பப் பெறப்படாது. இது மட்டுமின்றி, EMI ஆக மாற்றப்படும் பரிவர்த்தனைகளுக்கு வெகுமதி புள்ளிகள் பொருந்தாது.


ALSO READ:SBI Alert: இனி பரிவர்த்தனைகளுக்கு அதிக தொகை செலுத்த வேண்டும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR