Changes From November 1: வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன. இவற்றை மக்கள் தெரிந்துவைத்துக்கொள்வது அவசியமாகும். குறிப்பாக, ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி அன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்கும். வீட்டு உபயோக சிலிண்டராக இருந்தாலும் சரி, வணிக சிலிண்டராக இருந்தாலும் சரி அதன் விலை உயரவும் செய்யலாம், குறையவும் செய்யலாம். அதேபோல், பல்வேறு திட்டங்களிலும், விதிகளும் மாற்றங்கள் ஒவ்வொரு மாதத்தின் 1ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்படும். அப்படியிருக்க வரும் நவ.1ஆம் தேதி ஏற்படும் மாற்றங்களை ஒவ்வொன்றாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்


எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இது முக்கியமானது ஆகும். வரும் நவ.1ஆம் தேதியில் இருந்து இதன் விதிகளில் மாற்றம் வருகிறது. கிரெடிட் கார்டு விதி மாற்றத்தால் நவம்பர் 1 முதல் Unsecured எஸ்பிஐ கிரெடிட் கார்டில் ஒவ்வொரு மாதமும் 3.75 நிதிக் கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர, மின்சாரம், தண்ணீர், எல்பிஜி எரிவாயு உள்ளிட்ட பயன்பாட்டு சேவைகளில் 50,000 ரூபாய்க்கு மேல் செலுத்தினால் 1 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும் புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


13 நாள்கள் விடுமுறை


பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறைகள், சட்டப்பேரவைகள் தேர்தல்கள் காரணமாக நவம்பர் மாதத்தில் பல சந்தர்ப்பங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 13 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் உங்கள் வங்கிகளின் ஆன்லைன் சேவைகள் 24X7 தொடரும். 


மேலும் படிக்க | போலியாக ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்பே இல்லை.. அரசு போட்ட ஒரே கண்டிஷன்


மியூச்சுவல் ஃபண்ட்


மியூச்சுவல் ஃபண்டுகளில் இன்சைடர் டிரேடிங் விதிகளை கடுமையாக்க செபி தயாராகி வருகிறது. இது நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளுக்கு வரவிருக்கும் புதிய இன்சைடர் விதிகளின்படி, இப்போது பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்கள் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களின் (AMC) நிதியில் பரிந்துரைக்கப்பட்ட அவர்களது நெருங்கிய உறவினர்களால் செய்யப்பட்ட ரூ.15 லட்சத்திற்கும் அதிகமான தொகையை இணக்க அதிகாரிக்கு கொடுக்க வேண்டும்.


டெலிகாம் 


ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் செய்திகளை கண்டறியும் வசதியை செயல்படுத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஸ்பேம் எண்களை தடுக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சென்றடையும் முன்பே அந்தச் செய்தியை ஸ்பேம் பட்டியலில் வைத்து எண்ணைத் தடுக்கலாம்.


சிலிண்டர் விலை மாற்றம் 


வணிக எரிவாயு சிலிண்டர் கடைசியாக ஜூலை மாதத்தில் விலை குறைந்தது, ஆனால் அதன் பிறகு தொடர்ந்து மூன்று மாதங்களாக அதிகரித்தே வருகிறது. இந்த காலகட்டத்தில் சிலிண்டர் விலை ரூ.94 ஆக உயர்ந்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி டெல்லியில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.48.50 ஆக உயர்ந்தது. 


மேலும் படிக்க | கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால்... ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா... உண்மை இதுதான்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ