Old Pension சூப்பர் அப்டேட்: இவர்களுக்கு இனி OPS நன்மைகள், அரசு கொடுத்த நற்செய்தி
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த முக்கிய புதுப்பிப்பின் தகவல்கள் இந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ளன.
பழைய ஓய்வூதியத் திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு ஜூலை 13 ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த முக்கிய புதுப்பிப்பின் தகவல்கள் இந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றை பற்றி விரிவாக காணலாம்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை சில மூத்த அதிகாரிகளுக்கு வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்ஓஎஸ் அதிகாரிகளுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பெறுவதற்கான ஒரு முறை வாய்ப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனினும், அவர்களது நியமனம் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) அறிவிப்புக்கான கட்-ஆஃப் தேதியான டிசம்பர் 22, 2003 -க்கு முன்னதாக இருக்க வேண்டும் என்பது இதற்கான நிபந்தனையாக இருக்கும்.
பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய சர்வீசஸ் (ஏஐஎஸ்), இந்திய நிர்வாக சர்வீஸ் (ஐஏஎஸ்), இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) மற்றும் இந்திய வன சேவை (ஐஎஃப்ஓஎஸ்) அதிகாரிகளிடமிருந்து பிரதிநிதித்துவம் பெற்றுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு... இனி இந்த அத்தியாவசிய பொருளும் மலிவு விலையில்!
மத்திய அரசின் பதவி உயர்வு மற்றும் பயிற்சித் துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு ஜூலை 13 ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்து NPS-ன் கீழ் உள்ள AIS அதிகாரிகளுக்கு 1958 இன் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் வருவதற்கான விருப்பம் வழங்கப்படலாம் என்று அந்தக் கடிதம் கூறுகிறது. இதில் 2003 சிவில் சர்வீசஸ் தேர்வு, சிவில் சர்வீசஸ் தேர்வு 2004 மற்றும் இந்திய வனப் பணி 2003 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட AIS அதிகாரிகளும் அடங்குவர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர ஊழியர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே அளிக்கப்படும். 30 நவம்பர் 2023 வரை பழைய ஓய்வூதியப் பலன்களுக்கு விண்ணப்பிக்காத அதிகாரிகள் முன்பு போலவே என்பிஎஸ் -இன் பலனைப் பெறுவார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வர வேண்டும் என பல மாதங்களாக மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பல வித பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. சில மாநில அரசுகள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சமீபத்தில் இது குறித்த ஒரு புதுப்பிப்பு வந்தது.
ஊழியர்கள் தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்துக்காக காத்திருக்க வேண்டும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு வந்துள்ளது. அதன்பிறகு 2024 பிப்ரவரி வரை பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை ஊழியர்கள் பெற முடியாது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
லட்சக்கணக்கான மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெற்றிருக்கலாம். இதற்கு, ஜனவரி 11ம் தேதி, டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு பெரிய தீர்ப்பை வழங்கியது. இதில் சிஆர்பிஎஃப் ஊழியர்கள் மற்றும் ஜவான்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தடை உத்தரவு பிறப்பித்தது.
மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்க திட்டமா... EMI சுமையை குறைக்க சில டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ