Old Pension அதிரடி செய்தி: இந்த ஊழியர்களுக்கு இனி OPS வசதி, NPS கேன்சல்

Old Pension Scheme: மத்திய அரசு, ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளித்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்ய வாய்ப்பை அளித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 30, 2023, 01:58 PM IST
  • பழைய ஒய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்கள், அதற்கான காலக்கெடுவிற்கு முன் விண்ணப்பிக்கவும்.
  • ஆகஸ்ட் 31-க்குள் செயல்முறையை முடிக்கவும்.
  • செயல்முறை பல கட்டங்களில் முடிக்கப்படும்.
Old Pension அதிரடி செய்தி: இந்த ஊழியர்களுக்கு இனி OPS வசதி, NPS கேன்சல் title=

பழைய ஓய்வூதியத் திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நாடு முழுவதும் இருந்து வருகிறது. அதே நேரத்தில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை பல மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. நாட்டின் பல ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்க, மத்திய அரசும் ஏற்பாடுகள் செய்துள்ளது. அப்படி பழைய ஒய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்கள், அதற்கான காலக்கெடுவிற்கு முன் விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்படும். அதேபோல் சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் வழங்கப்படும்.

ஆகஸ்ட் 31-க்குள் செயல்முறையை முடிக்கவும்

மத்திய அரசு, ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளித்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்ய வாய்ப்பை அளித்துள்ளது. இதற்கான உத்தரவை பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ளது. அதில், டிசம்பர் 22, 2003க்கு முன் விளம்பரம் செய்யப்பட்ட அல்லது பட்டியலிடப்பட்ட பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிகள், 1972ன் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர அவர்கள் தகுதி பெறுவர். இருப்பினும், இதற்காக, ஆகஸ்ட் 31, 2023 வரை, அவர்கள் விருப்பத்தைத் தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 -க்குள் பணியாளர்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது கட்டாயமாகும்.

CRPF ஜவான்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறுகிறார்கள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை சில CRPF ஜவான்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மத்திய அரசு வழங்கக்கூடும். தற்போது, ​​இந்த ஜவான்கள் மற்றும் அதிகாரிகள் என்பிஎஸ் வரம்பிற்குள் வருகிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுவதுடன், அவர்களின் என்பிஎஸ் கணக்கும் மாற்றப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், இந்த ஊழியர்கள் அனைவரும் என்பிஎஸ் இல் இருந்து விலகி ஓபிஎஸ் -இல் சேருவார்கள். பழைய ஓய்வூதிய முறையில் மத்திய அரசு எந்த ஊழியர்களை சேர்க்கிறதோ, அவர்களது என்பிஎஸ் கணக்கு ஜிபிஎஸ் கணக்காக மாற்றப்படக்கூடும். 

அனைத்து மண்டலங்களுக்கும் சிஆர்பிஎஃப் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அந்த ஊழியர்கள் அனைவரும் என்பிஎஸ் -இல் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு, இவர்களுடைய ஆட்சேர்ப்பு விளம்பரம் அல்லது அறிவிப்பு டிசம்பர் 22, 2003க்கு முன் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பல ஊழியர்கள் சில காரணங்களுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக என்பிஎஸ் -இல் சேர்க்கப்பட்டனர். இவ்வாறான நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளது.

அதே நேரத்தில், அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் பணியாளர்களின் பட்டியலை செப்டம்பர் 20, 2023 க்குள் தயார் செய்ய அனைத்து மண்டலங்களின் ஏடிஜி -கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதுபோன்ற வழக்குகளின் இறுதி உத்தரவுகள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நியமன அதிகாரிகளால் வெளியிடப்படலாம். இதனுடன், இந்த ஊழியர்கள் என்பிஎஸ்-ல் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேருவார்கள் என்று நம்பப்படுகிறது. இதனுடன், அவர்களின் என்பிஎஸ் பணம் திரும்பப் பெறப்பட்டு ஜிபிஈப் -இல் டெபாசிட் செய்யப்படும்.

மேலும் படிக்க | LPG Cylinder விலை குறைகிறதா? உங்க ஊர்ல என்ன ரேட்? புதிய அப்டேட் இதோ

செயல்முறை பல கட்டங்களில் முடிக்கப்படும்

இதற்கான செயல்முறை பல கட்டங்களில் முடிக்கப்படும். இதற்காக ஒரு குழு அமைக்கப்படலாம். குழுவானது சேவை புத்தகம் மற்றும் பிற பதிவுகளை அதன் வரம்பிலிருந்து ஆய்வு செய்யும். நியமிக்கப்பட்ட குழு மூலம் சிஆர்பிஎஃப் அலுவலகத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்கக்கூடும். இதனுடன், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு டிடிஓ என்பிஎஸ்  கணக்கை மூடலாம்.

கூடவே ம்பந்தப்பட்ட பணியாளர் அதிகாரிக்கு ஜிபிஎஃப் கணக்கு எண்ணை வழங்குவதற்கான செயல்முறையையும் தொடங்கலாம். இந்த நடவடிக்கையை செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம். என்பிஎஸ் -இல் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்த பிறகு, ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட அதிகாரி ஊழியர்களுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும். இதனுடன், அவர்களின் ஓய்வூதியத் தொகையும் உயரும். அதுமட்டுமின்றி நிரந்தர ஓய்வூதிய பலனும் கிடைக்கும்.

மாநிலங்கள் பிஎஃப்ஆர்டிஏ -வில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தைப் பெறாது

முன்னதாக, பல்வேறு மாநிலங்களில் உள்ள என்பிஎஸ் ஊழியர்களின் பணம் பிஎஃப்ஆர்டிஏவில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேச அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. ஆனால், PFRDA மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போது பிஎஃப்ஆர்டிஏ -வில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெற பல நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் அரசு ஊழியர்களின் என்பிஎஸ் தொகை மாநில அரசிடம் திரும்ப அளிக்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால், மற்ற மாநில அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. எந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோ, அவர்களிடம், என்பிஎஸ் ஊழியர்களின் பணம் ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்திடம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. PFRDA மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த பணம் மாநில அரசுக்கு வழங்கப்படாது. இந்த பணம் ஊழியர்களுக்கு சொந்தமானது மற்றும் ஊழியர்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மாதம் 80000 சம்பாதிக்க 5000 ரூபாய் முதலீடு போதும்! நம்பகமான தொழில் வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News