ரயிலில் கன்ஃபார்ம் டிக்கெட் எடுப்பது எப்படி: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள் என்றால் உடனே இந்த செய்தியை படிக்கவும்.. ஏனெனில் நீங்கள் ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பண்டிகை காலத்தையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இந்த நேரத்தில் பெரும்பாலான ரயில்களில் கன்ஃபர்ம் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. மேலும், இந்த காலகட்டத்தில், பேருந்து மற்றும் விமான கட்டணங்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. எனவே ரயில்களில் கன்ஃபர்ம் டிக்கெட் கிடைக்காததால், தீபாவளி பண்டிகையின் போது மக்கள் வீட்டிற்கு செல்ல சிரமப்படுகிறார்கள்.


இந்நிலையில் தற்போது மக்களின் வசதிக்காக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல 283 சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் மூலம் சுமார் 60 லட்சம் பேர் தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படுவார்கள். இந்த சிறப்பு ரயில்களால் கூட்ட நெரிசலில் இருந்து காப்பாற்றப்படும் என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தார். இரயில்களின் எண்கள் IRCTC இணையதளத்தில் இரவில் புதுப்பிக்கப்படும். மேலும் மறுநாள் காலை முதல் முன்பதிவு தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு காலை 8 மணி முதல் தொடங்கும்.


மேலும் படிக்க | கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசை வழங்கிய PNB, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது எப்போது?
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால், டிக்கெட் கன்ஃபர்ம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், பெரும்பாலும் சிறப்பு ரயில்கள் இரவில் கணினியில் புதுப்பிக்கப்பட்டு காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கும், இதன் காரணமாக ரயில்களில் கன்ஃபர்ம் செய்யப்பட டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. அந்த வகையில் நீங்கள் வீட்டிற்கு செல்ல தயாராகும் ஒரு நாள் முன்பாக, ஐஆர்சிடிசி போர்ட்டலில் சிறப்பு ரயிலை சரிபார்க்கவும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சிறப்பு ரயிலில் உங்களுக்கு கன்ஃபர்ம் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், காத்திருப்போர் பட்டியலில் இருந்து டிக்கெட்டை வாங்கவும்.


ரயில்வே விகல்ப் வசதி:
அதேபோல் நீங்கள் ரயில்வேயின் ’விகல்ப்’ வசதியைப் பயன்படுத்தி உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். ரயில்வேயின் Vikalp விருப்பத்தில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கின்றன. இந்த விகல்ப் வசதி 2015ஆம் ஆண்டு ரயில்வேயால் தொடங்கப்பட்டது. இந்த வசதியின் கீழ், ஆன்லைனில் காத்திருப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுக்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு முன்பதிவு செய்தால், உறுதியான டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.


Paytm மூலம் டிக்கெட் கன்பார்ம் பண்ணலாம்:
Guaranteed Seat Assistant என்பது Paytm செயலியின் புதிய அம்சம். ரயில்கள், பேருந்துகள் மற்றும் விமானங்களின் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைப்பது பற்றிய தகவலை இது உங்களுக்கு வழங்கும். இந்த அம்சம் டிக்கெட் கிடைக்கக்கூடிய அருகிலுள்ள நிலையங்களையும் தேடும். உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், அது உங்களுக்கு பேருந்து மற்றும் விமான டிக்கெட் விருப்பங்களைக் காண்பிக்கும்.   Paytm செயலியை திறந்து ரயில் டிக்கெட் முன்பதிவு பிரிவில் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் பயண விவரங்களை உள்ளிடவும். உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், அருகிலுள்ள பேருந்து, விமான நிலையங்களில் இருந்து உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான விருப்பங்களை Paytm ஆப் காண்பிக்கும். நீங்கள் ஒரு நல்ல விருப்பத்தைக் கண்டால், போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை முன்பதிவு செய்யவும்.  Paytm தனது டிராவல் விழாக்கால விற்பனையை அறிவித்துள்ளது. இது நவம்பர் 27 முதல் நவம்பர் 5 வரை இயங்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு டபுள் தீபாவளி பரிசு.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ