மூத்த குடிமக்களுக்காக வந்தாச்சி செம டூர் பேக்கேஜ்.. ரயில்வே ஜாக்பாட் அறிவிப்பு

IRCTC Tour Package: ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரயில்வேயால் பல வகையான டூர் பேக்கேஜ்கள் கொண்டு வரப்படுகின்றன, இதில், பயணிகளின் அனைத்து விதமான வசதிகளையும் ஐஆர்சிடிசி கவனித்து வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 14, 2023, 10:38 AM IST
  • உணவு, பானங்கள் பற்றி கவலைப்படாமல், மூன்று நட்சத்திர விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்படும்.
  • சில்கா, கோனார்க், பூரி ஆகிய இடங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று பலன் பெறுவீர்கள்.
  • இந்த சுற்றுப்பயணம் நவம்பர் 2 முதல் தொடங்கும்.
மூத்த குடிமக்களுக்காக வந்தாச்சி செம டூர் பேக்கேஜ்.. ரயில்வே ஜாக்பாட் அறிவிப்பு title=

ஐஆர்சிடிசி கோயில் தரிசன சுற்றுப்பயணத் தொகுப்பு: உங்கள் வீட்டில் இருக்கு  மூத்த குடிமக்களுக்கு பயணம் செய்வதை பிடிக்கும் என்றால் இந்த செய்தியை கட்டாயம் ஒருமுறை பார்வையிடவும், இந்தத் தொடரில், நீங்கள் கோயில்களுக்குச் செல்ல விரும்பினால், ஐஆர்சிடிசி அதாவது இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் உங்களுக்காக ஒரு சிறந்த டூர் பேக்கேஜைக் கொண்டு வந்துள்ளது. இதில், நீங்கள் புவனேஸ்வர், சில்கா, கோனார்க் மற்றும் பூரிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவீர்கள், அதில் உங்கள் பேக்கேஜை முன்பதிவு செய்த பிறகு கூடுதல் பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. எனவே தாமதமின்றி இந்த டூர் பேக்கேஜ் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

பேக்கேஜ் பற்றிய முக்கியத் தகவல்கள்:-
பேக்கேஜ் (IRCTC Tour Package) பெயர்- டிவைன் பூரி டூர் பேக்கேஜ் (Divine Puri Tour Package)
பயணத் தேதிகள் – 2 நவம்பர் 2023, 14 டிசம்பர் 2023, 25 ஜனவரி 2023, 17 பிப்ரவரி 2024 மற்றும் 15 மார்ச் 2024.
இந்த பேக்கேஜ் 3 இரவுகள் மற்றும் 4 பகல்களுக்கு நீடிக்கும். அதே நேரத்தில், இந்த பேக்கேஜின் கீழ் உங்களுக்கு காலை மற்றும் இரவு உணவு வழங்கப்படும்.
நாம் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி பேசுகையில், இந்த பேக்கேஜில் நீங்கள் புவனேஸ்வர், சில்கா, லார்ட் ஜெகநாதர் கோயில் மற்றும் கோனார்க் கோயில்களுக்கு (Bhubaneswar, Chilka, Jagannath Temple and Konark Temple) அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

மேலும் படிக்க | பஜாஜ் கிரெடிட் கார்டுகளை ஆன்லைனில் உடனடியாக பெறுவது எப்படி?

பேக்கேஜின் முழு கட்டண விவரம்:
இந்த டிவைன் பூரி டூர் பேக்கேஜ் ஒரு நபருக்கு ரூ.40,900 கட்டணம் வசூலிக்கும்.
அதே சமயம் இரண்டு பேர் சேர்ந்து பயணம் செய்தால் ஒருவருக்கு ரூ.32 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கப்படும்.
அதேசமயம், மூன்று பேர் ஒன்றாக தங்கினால், தலா ரூ.31 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.

Package Cost (Per Person):

Class

Single Occupancy

Double Occupancy

Triple Occupancy

Child with Bed(05 Yrs - 11 Yrs)

Child without Bed(05 Yrs - 11 Yrs)

Child without Bed(02 Yrs - 04 Yrs)

Standard

40,900/- 32,500/- 31,000/- 28,000/- 23,600/- 20,300/-

இந்த வசதிகள் கிடைக்கும்:
டெல்லியிலிருந்து புவனேஸ்வர் விமானங்கள்
ஏசி கார்கள்
மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி
காலை மற்றும் இரவு உணவு வழங்கப்படும்.

சுற்றுப்பயணம் எங்கு தொடங்கும்?
இந்த டூர் பேக்கேஜ் டெல்லியில் இருந்து தொடங்குகிறது. டெல்லி விமான நிலையத்திலிருந்து புவனேஸ்வருக்கு விமானம் கிடைக்கும். இந்த பேக்கேஜ் மூலம் உலகப் புகழ் பெற்ற ஜெகநாதர் கோயிலையும், கோனார்க்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற சூரியன் கோயிலையும் நீங்கள் பார்வையிடலாம்.

 

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க செய்ய வேண்டியவை... முழு விபரம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News