8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக சில கோரிக்கைகள் இருந்துவருகின்றன. அவற்றில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படியின் நிலுவைத் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, அடுத்த ஊதியக்குழுவை அமைப்பது ஆகியவை முக்கியமானவை ஆகும். தேசிய ஓய்வூதிய முறையை மேம்படுத்தி ஊழியர்களுக்கான நன்மைகளை அதிகப்படுத்த, நிதிச் செயலர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவை மோடி அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பதற்கும் மோடி அரசு ஒப்புதலை அளிக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய போக்குகளை பார்க்கும்போது, அடுத்த ஊதியக்கமிஷனான 8 ஆவது ஊதியக்கமிஷன் 2023 ஆம் ஆண்டில் அமைக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2022ல், எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பதற்கு மோடி அரசு ஒப்புக்கொள்ளுமா என்ற கேள்வி நிதி அமைச்சரிடம் கேட்கப்பட்டது. அப்போது, இந்தக் கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் அப்போது இல்லை என்று தெரிவித்தார். கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் இந்த பதிலை வழங்கியிருந்தார். 


தேசிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மோடி அரசுக்கு தெளிவு இருந்ததால், மக்களவையில் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டபோது, அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய முறையை மேலும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு குழு அமைக்கப்பட்டது. நிதி அமைச்சரின் இந்த முடிவு ஊழியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. 


2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், ஆளுங்கட்சிக்கு அரசு ஊழியர்களின் வாக்கு மிக முக்கியமானது. இதுபோன்ற சூழ்நிலையில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்த ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எட்டாவது ஊதியக் குழு அமைப்பதற்கும் மோடி அரசு கிரீன் சிக்னல் கொடுக்கக்கூடும் என நம்பப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: மீண்டும் அதிரடியாக உயரும் அகவிலைப்படி, இந்த நாளில் அறிவிப்பு


மக்களவைத் தேர்தலுக்கு முன், சம்பள கமிஷன் அமைக்காமல், அரசு ஊழியர்களின் அதிருப்தியை சம்பாதிக்க அரசு தயாராக இருக்காது. எதிர்கட்சிகள் இதை என்.பி.எஸ் போன்ற பெரிய தேர்தல் பிரச்சினையாக்கலாம். தேசிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்தது. இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


அதன்பிறகு, என்.பி.எஸ்-ஐ மறுஆய்வு செய்ய அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. ஆகையால், இதேபோல் எட்டாவது ஊதியக் குழுவையும் அரசாங்கம் அமைக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.


1947 முதல் பல ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழுவை அரசு அமைக்கிறது. இந்த ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.


24 பிப்ரவரி 2014 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக் குழுக்கள், மத்திய ஊழியர்களின் சம்பளத்தை பெரிய அளவில் உயர்த்த பரிந்துரை செய்திருந்தன. அதை ஏற்று அரசுகளும் அரசாங்கத்தின் சம்பளத்தை உயர்த்தின. 


மேலும் படிக்க | 8th Pay Commission மெகா அப்டேட்: விரைவில் வருகிறது 44% ஊதிய உயர்வு!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ