7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி.. அரியர் தொகையில் வரி சலுகை பெறலாம்.. வழிமுறை இதோ
7th Pay Commission: சம்பளத்தின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் பெறும் நிலுவைத் தொகை மற்றும் முன்பண தொகைகளுக்கு வருமான வரிச் சட்டத்தின்படி வரி விதிக்கப்படும். இருப்பினும், நீங்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், பிரிவு 89 இன் கீழ் நிவாரணம் பெற முடியும்.
மதிப்பீட்டு ஆண்டு (AY) 2023-24 -க்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. வரி செலுத்துவோர் அனைவரும் தங்கள் வரிப் பொறுப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 89 -இன் கீழ், சம்பளத்தின் ஒரு பகுதியாக முன்பணம் அல்லது நிலுவைத் தொகையைப் பெறும் அரசு ஊழியர்கள் வரிச் சலுகையைப் பெறலாம்.
சம்பளத்தின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் பெறும் நிலுவைத் தொகை மற்றும் முன்பண தொகைகளுக்கு வருமான வரிச் சட்டத்தின்படி வரி விதிக்கப்படும். இருப்பினும், நீங்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், பிரிவு 89 இன் கீழ் நிவாரணம் பெற முடியும்.
எனினும், பணியாளர்கள் வரிச் சலுகையைப் பெற, மின்-தாக்கல் போர்ட்டலில் (e-filing Portal) படிவம் 10E ஐ (Form 10E) ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும். பிரிவு 89(1) இன் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கான (நிலுவைத் தொகை பெறப்பட்ட ஆண்டு மற்றும் வருமானம் உருவாக்கப்பட்ட ஆண்டு) வரியை மீண்டும் கணக்கிடுவதன் மூலம் பணியாளர்களுக்கு விலக்குகள் அனுமதிக்கப்படுகின்றன.
பிரிவு 89 -இன் கீழ் நிவாரணம் பெறுவது எப்படி?
பிரிவு 89- இன் கீழ் விலக்கு பெற உரிமையுள்ள ஒரு அரசு ஊழியர் படிவம் 10E ஐ சமர்ப்பிக்க வேண்டும். படிவம் 10E ஐ பதிவிறக்கம் செய்ய முடியாது. மேலும் வரி செலுத்தும் ஊழியர்கள் அதை ஆன்லைனில் தாக்கல் செய்து வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலில் ( Income Tax e-filing portal) சமர்ப்பிக்க வேண்டும்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 89(1) இன் கீழ், பின்வரும் ரசீதுகளுக்கு வரி நிவாரணம் கோரலாம்:
- அரியர்சில் அல்லது முன்பணமாக (அட்வான்சாக) பெறப்பட்ட சம்பளம்.
- வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்கூட்டியே எடுக்கப்பட்ட தொகை (Premature withdrawal)
- கிராஜுவிட்டி
- ஓய்வூதியத்தின் மாற்றியமைக்கப்பட்ட மதிப்பு
- குடும்ப ஓய்வூதிய அரியர்ஸ்
- பணிநீக்கம் செய்யப்பட்டதில் பெறப்பட்ட இழப்பீடு
மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை ஜாக்பாட்: பம்பர் ஊதிய உயர்வு.....முதலில் DA, பின் HRA
படிவம் 10E ஐ தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள்:
ஸ்டெப் 1: ஐடிஆர் -ஐ தாக்கல் செய்வதற்கு முன் படிவம் 10E ஐ ஆன்லைனில் தாக்கல் செய்ய, நீங்கள் e-filing portal- http://www.incometax.gov.in இல் லாக் இன் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2: லாக் இன் செய்த பின்னர், டேக்ஸ் இ-ஃபைல் என இருக்கும் டேபை கிளிக் செய்யவும். பின்னர் வருமான வரிப் படிவங்களை டேப் செய்து, File Income Tax Forms -ஐ கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: தானாகவே, ஒரு புதிய டேப் திரையில் திறக்கும். அங்கு நீங்கள் "Tax Exemptions and Revocation Form 10E” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது சர்ச் பாக்சில் Form 10E என்பதையும் நீங்கள் சர்ச் செய்யலாம்.
ஸ்டெப் 4: இப்போது, நீங்கள் மதிப்பீட்டு ஆண்டை (AY) தேர்ந்தெடுக்க வேண்டும், பின்னர் தொடரவும் (கண்டின்யூ) என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: அடுத்து, நீங்கள் அறிவுறுத்தல் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். அங்கு நீங்கள் "Let's Get Started" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 6: மேலே தொடர, "Arrears Salary/Family Pension" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 7: தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, முன்னோட்டத்தை (ப்ரிவ்யூ) கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 8: பிறகு, 'ப்ரொசீட் டு ஈ-வெரிஃபை' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 9: தானாக, நீங்கள் மின் சரிபார்ப்பு பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.
ஸ்டெப் 10: மின் சரிபார்ப்பு முடிந்ததும், "வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டது" என்று ஒரு செய்தி திரையில் தோன்றும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: குஷியில் ஊழியர்கள்! அகவிலைப்படியில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ