ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி: நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு தானியங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட நிதியுதவிகளும் கிடைக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் நம் நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆதார் கார்டு என்பது இந்தியர்கள் அனைவருக்குமே மிக முக்கியமான ஆவணம் ஆகும். இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல. பல்வேறு விஷயங்களில் ஆதார் கார்டை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அந்த வகையில் தற்போது ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி.. விரைவில் 50% டிஏ, விவரம் இதோ


இந்நிலையில் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. கடைசியாக வெளியாகிய அறிவிப்பின்படி, ஜூன் 30ஆம் தேதிக்குள் அனைவரும் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதையும் தாண்டி ஆதார் கார்டை இணைக்காமல் இருந்தால் ரேஷன் உதவிகள் மற்றும் இதர நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியாமல் போகும்.


ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் ஆன்லைனில் எப்படி இணைப்பது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்:


1. முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். 
2. பிறகு நீங்கள் 'Start Now' என்பதைக் கிளிக் செய்க. 
3. இப்போது இங்கே உங்கள் முகவரியை மாவட்ட மாநிலத்துடன் நிரப்ப வேண்டும். 
4. இதற்குப் பிறகு 'Ration Card Benefit' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். 
5. இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும். 
6. பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். 
7. இங்கே OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள். 
8. இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.


ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கு மாற்று வழி:
நேரடியாக சென்று ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க விரும்பினால், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கே உங்களுடைய ரேஷன் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுவிடும்.


மேலும் படிக்க | 7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி.. 45% டிஏ, அறிவிப்பு எப்போது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ