7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி.. 45% டிஏ, அறிவிப்பு எப்போது

7th Pay Commission: அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படும் என்றும் அதன் பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 45 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்றும் செய்தி நிறுவனமான பிடிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2023, 03:04 PM IST
  • விலைவாசி உயர்வை ஈடுகட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அகவிலைப்படியை வழங்குகிறது.
  • காலப்போக்கில் வாழ்க்கைச் செலவு உயரும் போது, ​​அது CPI-IW மூலம் பிரதிபலிக்கிறது.
  • இந்த கொடுப்பனவு வருடத்திற்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாற்றியமைக்கப்படுகிறது.
7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி.. 45% டிஏ, அறிவிப்பு எப்போது title=

7வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படும் என்றும் அதன் பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 45 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்றும் செய்தி நிறுவனமான பிடிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகின்றது. 

1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரண (டிஆர்) விகிதங்களை தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரண (டிஆர்) விகிதங்கள் தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவான தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படுகிறது.

“ஜூன் 2023 -க்கான CPI-IW ஜூலை 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. நாங்கள் அகவிலைப்படியில் நான்கு சதவீத புள்ளி உயர்வு கோருகிறோம். ஆனால் அகவிலைப்படி அதிகரிப்பு மூன்று சதவீத புள்ளிகளை விட சற்று அதிகமாக உள்ளது. ஒரு தசம புள்ளிக்கு மேல் அகவிலைப்படி அதிகரிப்பதை அரசாங்கம் பரிசீலிக்கவில்லை. இதனால் டிஏ மூன்று சதவீத புள்ளிகள் அதிகரித்து 45 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது" என்று அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் எவ்வளவு? 3% அல்லது 4%? இதன் பின் உள்ள கணக்கீடு என்ன?

நிதியமைச்சகத்தின் செலவினத் துறை, அதன் வருவாய் தாக்கங்களுடன் டிஏவை உயர்த்துவதற்கான முன்மொழிவைத் தயாரித்து, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு முன்வைக்கும் என்று மிஸ்ரா மேலும் கூறினார். அறிவிப்புக்குப் பிறகு, அகவிலைப்படி / அகவிலை நிவாரண உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும். தற்போது 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தின் 42% விகிதத்தில் அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் அளிக்கப்படுகின்றது. 

கடைசியாக அகவிலைப்படி உயர்வு மார்ச் 24, 2023 அன்று செய்யப்பட்டு, ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்தது. அந்த நேரத்தில், மத்திய அரசு, டிசம்பர் 2022 இல் முடிவடையும் காலத்திற்கான இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில் அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தி மொத்த அகவிலைப்படியை 42% ஆக அதிகரித்தது. 

விலைவாசி உயர்வை ஈடுகட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அகவிலைப்படியை வழங்குகிறது. காலப்போக்கில் வாழ்க்கைச் செலவு உயரும் போது, ​​அது CPI-IW மூலம் பிரதிபலிக்கிறது. இந்த கொடுப்பனவு வருடத்திற்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாற்றியமைக்கப்படுகிறது.

நான்கு சதவீதம் டிஏ அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?

ஏஐசிபிஐ குறியீட்டின் கடந்த 6 மாத புள்ளிவிவரங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், இம்முறையும் அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஊழியர்களின் டிஏ மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஆர் தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதன் காரணமாக அவர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெருமளவில் உயர வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த முறையும் டிஏ மற்றும் டிஆர் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டால், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாக இருக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் 3% அல்லது 4%? ஏன் இந்த குழப்பம்? எப்போது அறிவிப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News