அதிர்ச்சி செய்தி, இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது: ஊழியர்களுக்கான விதியில் மாற்றம்
Pension and Gratuity: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? இப்படி செய்தால் உங்கள் பென்ஷன் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும், ஜாக்கிரதை!!
கிராஜுவிட்டி மற்றும் ஓய்வூதிய விதி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி. அவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடலாம். அப்படி ஒரு கடினமான முடிவை அரசு எடுத்துள்ளது. பணிக்கொடை, அதாவது கிராஜுவிட்டி மற்றும் ஓய்வூதியம் தொடர்பான விதி அரசாங்கத்தால் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கையை ஊழியர்கள் புறக்கணித்தால், அது அவர்களுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கும்.
அரசு இந்த உத்தரவுகளை வழங்கியது
சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாத அகவிலைப்படி அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், சில காலத்திற்கு முன்பு, அரசாங்கத்தால் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பணியிடத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அலட்சியமாக இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதன் கீழ் அவர்களது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிறுத்தப்படும். அத்தகைய சூழ்நிலையில், விதிகளை கவனமாக படித்து அவற்றை பின்பற்ற வேண்டியது ஊழியர்களின் கடமையாகும்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 2022 அன்று அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதில், மத்திய அரசு ஊழியர்கள் பணியில் அலட்சியமாக இருந்தால், பணி ஓய்வுக்குப் பின் சிரமம் அதிகரிக்கும் என, எச்சரிக்கப்பட்டது.
புதிய விதிகள் சேர்க்கப்பட்டன
மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் கீழ், அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மத்திய ஊழியர் பணியின் போது ஏதேனும் கடுமையான குற்றம் அல்லது அலட்சியம் செய்தது தெரியவந்தால், பணி ஓய்வுக்குப் பிறகு, அவரது பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: மாதம் ரூ. 1 லட்சத்துக்கு மேல் வருமானம், விவரம் இதோ
இந்த அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன
ஓய்வுபெற்ற பணியாளரின் அப்பாயிண்ட்மெண்ட் அதாரிடியில் பங்குகொண்டிருந்த பிரெசிடெண்ட், ஓய்வுபெற்ற ஊழியரின் நியமன அதிகாரி, ஓய்வுபெறும் ஊழியர் நியமிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையின் செயலாளர் மற்றும் தணிக்கை மற்றும் கணக்குத் துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களின் சிஏஜி ஆகியோருக்கு, குற்றம் புரிந்த ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகு அவர்களது ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்தும் உரிமை உண்டு. பணியின் போது ஊழியர்கள் மீது ஏதேனும் துறை அல்லது நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.
இந்த சந்தர்ப்பங்களில் இந்த விதி பொருந்தும்
- ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் நியமிக்கப்பட்டிருந்தால்.
- ஓய்வு பெற்ற ஊழியர் ஓய்வூதியம் அல்லது கிராஜுவிட்டியை பெற்றுவிட்டு, அதன் பிறகு அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரிடமிருந்து முழு அல்லது பகுதியளவு தொகையை திரும்பப் பெறலாம்.
யுபிஎஸ்சி இடமிருந்து பரிந்துரைகள் பெறப்பட வேண்டும்
விதிகளின்படி, அத்தகைய சூழ்நிலையில் எந்தவொரு அதிகாரியும் இறுதி உத்தரவை வழங்குவதற்கு முன் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) பரிந்துரைகளைப் பெற வேண்டும். அதே நேரத்தில், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டாலோ அல்லது திரும்பப் பெறப்பட்டாலோ, குறைந்தபட்சத் தொகை மாதத்திற்கு ரூ 9000 ஆக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | Currency Note: பழைய 1000, 500 ரூபாய்... ஆர்பிஐ கடிதம் வைரல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ