யுபிஐ பேமெண்ட்ஸ்: டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பிறகு இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகள் மிகவும் அதிகரித்துள்ளன. யுபிஐ எனப்படும் பணபரிமாற்ற வசதியின் மூலம் உடனுக்குடன் எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி பண பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பேடிஎம் போன்ற செயலிகள் யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்வதில் முன்னிலையில் உள்ளன. இதன் மூலம் நாம் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவும் பெறவும் முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூ.12.82 லட்சம் கோடி செலுத்தல்


அந்த வகையில் தற்போது யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் டிசம்பரில் ரூ.12.82 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 782 கோடியை எட்டியது. இது குறித்து நிதிச் சேவைகள் துறை ட்வீட் ஒன்று செய்துள்ளது, அதன்படி 'நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட் புரட்சியைக் கொண்டு வருவதில் UPI பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளது. 2022 டிசம்பரில், UPI பரிவர்த்தனைகள் 782 கோடியைத் தாண்டி மொத்தம் ரூ.12.82 லட்சம் கோடியாக உள்ளது.


மேலும் படிக்க | ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா, அப்போ உடனே இத படிங்க


381 வங்கிகள் இந்த வசதியை வழங்குகின்றன


இதற்கிடையில் அக்டோபர் மதத்ததில் யுபிஐ மூலம் பணம் செலுத்துவது ரூ.12 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. நவம்பரில், 730.9 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன, அவற்றின் மதிப்பு ரூ.11.90 லட்சம் கோடி ஆகும். அத்துடன் தற்போது வரை 381 வங்கிகள் இந்த வசதியை வழங்குகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்பைஸ் மணி நிறுவனர் திலீப் மோடி கூறுகையில், கடந்த ஓராண்டில் UPI பரிவர்த்தனைகள் எண்ணிக்கை மற்றும் மதிப்பு இரண்டிலும் மிக வேகமாக வளர்ந்துள்ளது என்றார்.


மேலும் படிக்க | தமிழ் தொலைக்காட்சி ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு; நவம்பர் முதல் டிவி இல் Blacksheep


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ