ரிசர்வ் வங்கி கவர்னர்: ரூபாய் நோட்டுகள் தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன. 2016 ஆம் ஆண்டு முதல் ஆண்டில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதன்பிறகு சந்தையில் புதிய ரூ. 2000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. தற்போது மீண்டும் ரூ. 2000 நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 2000 நோட்டை டெபாசிட் செய்ய செப்டம்பர் 30 வரை அவகாசம் உள்ளது. இந்நிலையில், தற்போது 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் குறித்து பெரிய செய்திகள் வெளியாகி வருகின்றன. 1000 ரூபாய் நோட்டு தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1000 ரூபாய் நோட்டு வெளியிடப்படுமா?


2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து எடுத்த பிறகு, இப்போது புதிய 1000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது. இல்லையெனில் ரூ.500 நோட்டு நாட்டின் மிகப்பெரிய நோட்டாக மாறும்.


சந்தையில் போதுமான ரூபாய் நோட்டுகள்


1000 ரூபாய் நோட்டை வெளியிடும் திட்டம் தற்போது அரசிடம் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில் மற்ற வகை நோட்டுகள் போதிய அளவில் இருப்பதால் புதிய நோட்டுகள் எதையும் சந்தையில் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். செப்டம்பர் 30 அம் தேதிக்குப் பிறகு ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்ட பிறகு இதை பற்றி தேவைப்பட்டால் கலந்தாலோசிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | இனி ரூ. 5 லட்சம் இல்லை... ரூ. 10 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும்!


சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன


2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்ற செய்தி வெளியானதில் இருந்து மக்கள் மனதில் 1000 ரூபாய் நோட்டு குறித்து பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. 1000 ரூபாய் நோட்டு குறித்த பல செய்திகள் சமூக வலைதளங்களில் பலமுறை காணப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் ரிசர்வ் வங்கி இதுபோன்ற செய்திகளை மறுத்து வருகின்றது. 


சந்தையில் புதிய கரன்சி வரவேண்டும் என்ற அவசியமில்லை


சந்தையில் இருந்து ஒரு கரன்சி, அதாவது குறிப்பிட்ட மதிப்பிலான ரூபாய் நோட்டோ நாணயமோ அகற்றப்பட்டால், அதற்கு பதிலாக சந்தையில் புதிய கரன்சியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். இருப்பினும், செயல்முறையில் பெரிய பரிவர்த்தனைகளுக்கு, அதிக மதிப்பிலான வங்கி நோட்டுகளை வைத்திருப்பது அவசியம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், 500 ரூபாய் நோட்டு தான் மிகப் பெரிய கரன்சியாக நீடிக்கும் என்றால், இது யோசிக்க வேண்டிய விஷயமாகிறது.


ரூ.2000 நோட்டுக்கள் தொடர்பான சில முக்கிய தகவல்கள்: 


- 2016 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 ரூபாய் நோட்டு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.


- தனிநபர்கள் தற்போதுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது மே 23 முதல் செப்டம்பர் 30 வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.


- ரூ.2000-ன் 10 நோட்டுகள், அதாவது ரூ.20,000 -ஐ ஒரே நேரத்தில் மாற்றிக்கொள்ளலாம்.


- 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30, 2023 வரை செல்லும், ஆனால் அவை புழக்கத்தில் இருக்காது.


- 2018-19ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது


- க்ளீன் நோட் பாலிசியின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது


- 2000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் சுமார் 89% மார்ச் 2017 க்கு முன் வெளியிடப்பட்டன. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.


- 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் மற்ற வகை ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெற்றதால் நிறைவேற்றப்பட்டுள்ளது.


- வணிக வங்கிக் கிளைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ROs) நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.


- தனிநபர்கள் பரிமாற்ற வசதியை இலவசமாகப் பெறலாம்.


 மேலும் படிக்க | தீபாவளிக்கு ஊருக்கு போக ரயில் டிக்கெட் போட்டாச்சா... அனல் பறக்கும் முன்பதிவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ