Medical Insurance: குஜாரத் மாநில அரசு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா - முக்கியமந்திரி அமிர்தம் (PMJAY-MA) என்ற சுகாதார காப்பீடு திட்டத்தை ரூ. 10 லட்சமாக அதிகரிக்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது இப்போது நோயாளிக்கு ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
குஜராத் அரசின் இந்த திட்டம், மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல், சுகாதாரத் துறை அதிகாரிகள் முன்னிலையில் தனது அலுவலகத்தில் இருந்து திருத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நேற்று (ஜூலை 12) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
பட்ஜெட்டில் வாக்குறுதி
மாநில அரசின் சார்பில், குஜராத்தில் இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். மத்திய அரசின் PMJAY ஆனது ஆயுஷ்மான் பாரத் என்று பிரபலமாக அறியப்படுகிறது. குஜராத்தில் எம்ஏ என்றால் முக்யமந்திரி அமிர்தம் யோஜனா என்று பொருள். பிப்ரவரியில் மாநில பட்ஜெட்டில், PMJAY-MA திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக இரட்டிப்பாக்குவதாக நிதி அமைச்சர் கனுபாய் தேசாய் சட்டப்பேரவையில் அறிவித்தார். இப்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய அப்டேட்: உச்ச நீதிமன்றம் கொடுத்த ஷாக்!!
இதுகுறித்து குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறுகையில், "ஆயுஷ்மான் கார்டு வைத்திருப்பவர்கள் ரூ.10 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை, சிகிச்சை, சிறுநீரகம், இதயம், கல்லீரல் மற்றும் காக்லியர் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யலாம். மாநிலத்தில் உள்ள 2 ஆயிரத்து 27 அரசு மருத்துவமனைகள், 803 தனியார் மற்றும் 18 மத்திய அரசு மருத்துவமனைகள் PMJAY-MA திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கவோ அல்லது அறுவை சிகிச்சை செய்யவோ அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகையுடன் முக்யமந்திரி அமிர்தம் யோஜனா திட்டத்தை தொடங்கினார். பின்னர் அது ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. PMJAY 2018இல் பிரதமரால் ரூ 5 லட்சம் காப்பீட்டுத் திட்டத்துடன் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் சுகாதார காப்பீடு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ காப்பீடு
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் செயலில் உள்ளது. தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது என்பது நினைவுக்கூரத்தக்கது. இந்த திட்டம் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்துடன் இணைந்து தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் காப்பீட்டு திட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகள், 8 தொடர் சிகிச்சைகள் மற்றும் 52 பரிசோதனை முறைகள் உள்ளன. இந்தக் காப்பீட்டு திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இங்கு செயல்டுத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | Income Tax Return: வருமான வரி ரிட்டர்ன்களுக்கான விதிகளில் முக்கிய மாற்றங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ