1 பிப்ரவரி 2023 எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை: பட்ஜெட்டுக்கு முன்பாக கேஸ் சிலிண்டர்களின் விலைகள் பற்றிய பெரிய தகவல்கள் வெளியாகின்றன. அந்தவகையில் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது 1000 ரூபாய் வரை தாண்டியுள்ளது. பட்ஜெட்டுக்கு முன்னதாக, கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கலாம் என, பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வெளியான விலை நிலவரத்தின் படி கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மறுபுறம் இம்முறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தவில்லை என்பது சற்று நிம்மதியை அளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு எண்ணெய் நிறுவனங்கள் விலையை வெளியிட்டன
இந்தியன் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பிப்ரவரி மாதத்திற்கான வீட்டு உபயோக எரிவாயு விலையை வெளியிட்டுள்ளன. அதன்படி, சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லை. அதாவது டெல்லியில் வீட்டு உபயோக எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.1053 ஆகவே உள்ளது. எனவே மற்ற நகரத்தில் சிலிண்டரின் விலை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.


மேலும் படிக்க | பட்ஜெட்டுக்கு முன் ரூ.500 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!


வீட்டு சிலிண்டர் விலைகள்-
>> டெல்லி - ரூ 1053
>> மும்பை - ரூ 1052.5
>> கொல்கத்தா - ரூ 1079
>> சென்னை - ரூ 1068.5


வணிக சிலிண்டர் விலைகள்-
>> டெல்லி - ரூ 1769
>> மும்பை - ரூ 1721
>> கொல்கத்தா - ரூ 1870
>> சென்னை - ரூ 1917


கடந்த ஓராண்டில் சிலிண்டர் விலை 153.5 ரூபாய் உயர்ந்துள்ளது
வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் (14.2 கிலோ) விலையில் கடைசியாக 6 ஜூலை 2022 அன்று மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கடந்த ஓராண்டு காலத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.153.5 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சிலிண்டர் எத்தனை மடங்கு விலை உயர்ந்தது
2022ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் வீட்டு சிலிண்டர்களின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. பின்னர் மே மாதத்தில் மீண்டும் 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், மே மாதத்தில் இரண்டாவது முறையாக, 3.50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. இதன் பிறகு கடைசியாக ஜூலை மாதம் ரூ.50 விலை உயர்த்தப்பட்டது.


மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் NRI-களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா நிதியமைச்சர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ