புதுடில்லி: இது மிகவும் வினோதமான செய்திகளில் ஒன்றாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு பெண் கணவனிடம் விவாகரத்து கோருகிறார், ஏனெனில் அவளின் கணவர் அதிகமாக நேசிக்கிறார். ஆம்! நீங்கள் சரியாகப் படித்தீர்கள். அதிகப்படியான அன்பு அவளை 'மூச்சுத் திணறச் செய்கிறது'.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலீஜ்டைம்ஸ்.காம் (Khaleejtimes.com) அறிக்கையின்படி, அந்தப் பெண் தனது கணவரின் அதிகப்படியான காதல் குறித்து புகார் அளித்த பின்னர், புஜைராவில் உள்ள ஷரியா நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக விண்ணப்பித்துள்ளார்.


அந்த பெண் அளித்த புகாரில், “எனது கணவர் ஒருபோதும் என்னை தவறாக நினைக்க வில்லை, என்னை நிராகரிக்கவில்லை. அவரின் தீவிர அன்பு மற்றும் பாசத்தால் நான் திக்கு முக்காடி போகிறேன். வீட்டை சுத்தம் செய்யும் போது கூட அவர் எனக்கு உதவினார்.” எனக்கு விவகாரத்து வேணும் எனக் கூறியுள்ளார்.


மறுபுறம், அவரது கணவர், எனது மனைவிக்கு சரியானவராகவும், கனிவான கணவராகவும் இருக்க விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். விவாகரத்துக்கு செல்ல வேண்டாம், அதற்கு பதிலாக அதை திரும்பப் பெறுமாறு தனது மனைவிக்கு அறிவுறுத்துமாறு அவர் நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளார்.


தற்போது இந்த விவகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இருவரையும் சமரசம் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.