கவர்ச்சிப் பத்திரிகை இதழான ப்ளேபாய்-ன் இணையதளத்தை தன்னால் பயன்படுத்த முடியவில்லை என்று கண் பார்வையற்ற இளைஞர் அமெரிக்க சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகில் மிகப்பிரலமான கவர்ச்சி பத்திரிகைகளில் ‘Playboy’ அதிகப்படியான ரசிகர்களை கொண்டதாக உள்ளது. 1970 ஆம் ஆண்டுகளில் 56 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுவந்த பிளேபாய் பத்திரிக்கை தற்போது வெறும் எட்டு லட்சம் பிரதிகளே விற்கப்படுகிறது. ஆன்லைன் உலகில் கவர்ச்சிப்படங்கள் இடம்பெற்ற பத்திரிகைகள் மீதான ஆர்வம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Playboy ஆன்லைன் பத்திரிகையிலும் கவர்ச்சிப்படங்களை பதிவிடுவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் அந்த நிறுவனத்துக்கு வந்ததன் காரணமாக, தற்போது மிகவும் ஆபாசமான புகைப்படங்களை ப்ளேபாய் ஆன்லைன் தளமானது தவிர்த்து வருகிறது. இந்நிலையில், தன்னால் ப்ளேபாய் ஆன்லைன் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று பார்வையற்ற இளைஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


டொனால்ட் நிக்ஸன் என்பவர் தொடர்ந்த வழக்கில், “அமெரிக்க சட்டப்படி Playboy ஆன்லைன் தளத்தில் பார்வையற்றவர்கள் படிக்கும் வகையிலான சிறப்பு வசதிகள் கொண்ட சாப்ட்வேர் இல்லை. இதனால், என்னைப்போன்றவர்கள் எதுவும் படிக்க முடியவில்லை. திரையில் என்ன தெரிகிறது என்பதை கூறும் ஒலிவடிவம் இல்லாததால் என்னால் Playboy ஆன்லைன் தளத்தை பயன்படுத்த முடியவில்லை” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டப்படி டொனால்ட் நிக்ஸன் குற்றச்சாட்டுக்கு, ப்ளேபாய் இதழ் மீது இந்திய மதிப்பில் ரூ.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது!.