பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அலெக்ஸா மூலம் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிப்பார் என அமேசானின் Alexa தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமேசான் அலெக்ஸா (Amazon Alexa) ஒரு இந்திய நடிகரின் குரலைப் பயன்படுத்த அமேசான் பச்சனுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல் அலெக்சா பிரபலக் குரலாக மாற்றப்பட்ட சாமுவேல் எல். ஜாக்சனுடன் பச்சனும் இணைகிறார். 


இருப்பினும், ஜாக்சனின் அலெக்சா குரல் ஆங்கிலத்தில் (US) மட்டுமே கிடைக்கிறது. பச்சனின் அலெக்சா குரல் இந்தியாவிற்கு மட்டுமே மற்றும் இந்தி மொழியில் மட்டும் இருக்கும் என்று அமேசான் தெளிவுபடுத்தியுள்ளது. பச்சன் ஆங்கிலத்தில் பேசுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. 


இந்தியாவில் அமேசான் பயனர்கள் ‘அமிதாப் பச்சன் வாய்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்’ வாங்குவதன் மூலம் அலெக்ஸாவில் பச்சனின் குரலை அணுக முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,  அலெக்ஸாவில் அமிதாப் பச்சனின் குரலை கேட்க  நீங்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான கட்டணம் அல்லது தொகுப்பு விவரங்கள் அமேசானால் இன்னும் வெளியிடப்படவில்லை.


ALSO READ | செப்டம்பர் 25 முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு - மத்திய அரசு விளக்கம்!!


இந்த அம்சம் அடுத்த ஆண்டு மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கூட்டாண்மை குறித்து பச்சன் கூறுகையில், “தொழில்நுட்பம் எப்போதும் புதிய வடிவங்களுக்கு ஏற்ப எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாட்காஸ்ட்கள் இருந்தாலும், அமேசான் மற்றும் அலெக்சாவுடன் இணைந்து இந்த குரல் அனுபவத்தை உருவாக்க நான் மகிழ்ச்சியடைகிறேன். குரல் தொழில்நுட்பத்துடன், எனது பார்வையாளர்களுடனும் நலம் விரும்பிகளுடனும் மிகவும் திறம்பட ஈடுபட நாங்கள் ஏதாவது ஒன்றை உருவாக்குகிறோம்" என அவர் கூறியுள்ளார். 


இந்த அனுபவம் அதிகாரப்பூர்வமாக அடுத்த ஆண்டு கிடைத்த பிறகு, வாடிக்கையாளர்கள் அலெக்ஸாவில் அமிதாப் பச்சன் குரல் அனுபவத்தைப் பெற முடியும் என அமேசான் இந்தியாவின்  தலைவர் புனேஷ் குமார் கூறினார். 


ZEE ஹிந்துஸ்தான் மொபைல் செயலியை பதிவிறக்க: 


 


Android Link - https://bit.ly/3hDyh4G 


Apple Link - https://apple.co/3loQYeR