செப்டம்பர் 25 முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு - மத்திய அரசு விளக்கம்!!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இன்றோடு கிட்டதட்ட 173 நாட்கள் ஆகின்றன..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2020, 07:13 PM IST
செப்டம்பர் 25 முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு - மத்திய அரசு விளக்கம்!! title=

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இன்றோடு கிட்டதட்ட 173 நாட்கள் ஆகின்றன..!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு மத்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க செப்டம்பர் 25 முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அரசாங்கம் திங்கள்கிழமை (செப்டம்பர்-14) நிராகரித்தது. 

மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) செப்டம்பர் 25 முதல் மற்றொரு ஊரடங்கை விதிக்க மையத்தை பரிந்துரைத்ததாக வெளியான தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியதை தொடர்ந்து, மேலும் NDMA-ன் உத்தரவு என்ற கூறும் ஸ்கிரீன் ஷாட்-யை பகிந்து இது பொய்யான தகவல் என தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோன வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் வராவிட்டாலும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகள் அமலில் உள்ளன.  

ALSO READ | Good News: 40 லட்சம் வேலையற்றவர்களுக்கு இனி அரை ஊதியம் கிடைக்கும்!!

இந்நிலையில், வரும் செப்டம்பர் 25 ஆம் தேதியில் இருந்து மீண்டும் ஊரடங்கு  அமல்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.  “நாட்டில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், திட்டமிடல் ஆணையத்துடன் இணைந்து, 46 நாட்கள் தேசிய அளவிலான ஊரடங்கை செப்டம்பர் 25 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறது”  என ஆன்லைனில் பகிரப்பட்ட ஸ்க்ரீன் ஷாட் பதிவில் கூறப்ப்பட்டு இருந்தது. 

ஆனால், இந்த தகவலை முற்றிலும் பத்திரிகை தகவல் ஆணையம் (PIB) மறுத்துள்ளது. இது தொடர்பாக PIB டுவிட்டர் பக்கத்தில் உண்மை நிலை (PIB Fact Check) என்ன என்பது பற்றி அளிக்கப்பட்ட்டுள்ள விளக்கத்தில், "இந்த அறிக்கை முற்றிலும் போலியானது என பத்திரிகை தகவல் பணியகம்(Press Information Bureau) மறுத்துள்ளது. மேலும் ஊரடங்கை அமல்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசை எந்தவிதத்திலும் வலியுறுத்தவில்லை" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ZEE ஹிந்துஸ்தான் மொபைல் செயலியை பதிவிறக்க:

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News