சலுகை: Paytm-ல் இனி train ticket முன்பதிவு செய்தால்...
Paytm-ல் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் கூடுதலாக பரிவர்தணை கட்டணம் செலுத்த தேவையில்லை என Paytm தெரிவித்துள்ளது!
Paytm-ல் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் கூடுதலாக பரிவர்தணை கட்டணம் செலுத்த தேவையில்லை என Paytm தெரிவித்துள்ளது!
கடந்த சில ஆண்டுகளால ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்வது என்பது எளிதாக காரியமாக மாறி வருகின்றது. இதற்கு இந்திய ரயில்வேயின் IRCTC செயலி, வலைதளம் மிக முக்கியமான காரணியாக மாறியுள்ளது.
அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது பயணச்சீட்டினை இந்த IRCTC செயலி மூலம் அல்லது, மூன்றாம் பங்குதாரார் செயலிகள் மூலம் பெற்று வருகின்றனர். பயணசீட்டினை IRCTC-ல் பதிவு செய்து பெறும் வாடிக்கையாளர்களிடம் பெரும்பாலும் கூடுதல் பரிவர்தணை கட்டணங்கள் வசூளிக்கப்படுவதில்லை. ஆனால் அதே பயணிகள் மூன்றாம் பங்குதாரார் வலைதளம், செயலிகள் மூலம் பதிவு செய்தால் கூடுதலாக 10 ரூபாயினை பரிவர்தணை கட்டணமாக செலுத்த வேண்டும்.
சமீபத்தில் இந்த அம்சத்தினை பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Flipkart-ன் வணிக செயலி PhonePe தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தது. இந்நிலையில் மற்றுமொரு வணிக செயலியான Paytm தனது போட்டியாளர்களை சமாளிக்க பரிவர்தணை கட்டணமற்ற பயணசீட்டு முன்பதிவு அம்சத்தினை அறிமுகம் செய்துள்ளது.
அந்த வகையில் தற்போது Paytm செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், அதற்கான கட்டணத்தினை credit/debit cards, UPI, மற்றும் Paytm வேலட் மூலம் செலுத்தினால் பயணச்சீட்டிற்கான பரிவர்தணை கட்டணம் செலுத்த தேவையில்லை.
இதுகுறித்து Paytm துணைத்தலைவர் அபிசேக் ராஜன் தெரிவிக்கையில்... கடந்த அக்டோபர் 2018 வரை நாங்கள் பரிவர்தணை கட்டணம் வசூளித்தோம். இந்த கட்டணமாணது மொத்த பரிவர்தணையில் 1.8% வரையில் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த பரிவர்தணை கட்டண வழக்கத்தினை Paytm கைவிட்டுள்ளது.