பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியது!
2020-ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன் பதிவு இன்று முதல் துவங்கியது!
2020-ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன் பதிவு இன்று முதல் துவங்கியது!
பண்டிகை திருநாளான தீபாவளி, பொங்கல் போது சென்னை மற்றும் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதன் காரணமா ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலை மோதும். இந்நிலையில் பயணிகளின் சிரமத்தை அறிந்து, பண்டிகை தின பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் பொறுத்தவரையில் 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டதையடுத்து, ஜனவரி 10-ஆம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட்டுகளை இன்று (செப்டம்பர் 12) முன்பதிவு செய்யலாம். சரியாக காலை 8 மணிக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இணைய வழி திறக்கப்படுகிறது.
அதேபோன்று ஜனவரி 11-ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை (செப்.13-ஆம் தேதியும்), ஜனவரி 12-ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 14-ஆம் தேதியும், ஜனவரி 13-ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 15-ஆம் தேதியும் துவங்குகிறது. குறிப்பிட்ட நாள் பயணத்திற்கான டிக்கெட்டுகளை பயணிகள் மேற்குறிப்பிட்ட தினங்களில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று சொந்த ஊரில் இருந்து திரும்பும் போது, ஜனவரி 17-ஆம் தேதிக்கான முன்பதிவு எதிர்வரும் செப்டம்பர் 19-ஆம் தேதியும், ஜனவரி 18-ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 20-ஆம் தேதியும், ஜனவரி 19-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செப்டம்பர் 21-ஆம் தேதியும் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமாக இதுபோன்ற பண்டிகை நாட்களுக்கான டிக்கெட்டுகள் ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிடுவதால், இன்றும் இதே நிலையே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாள் துவங்கியது குறிப்பிடத்தகது. தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு துவங்கியது குறிப்பிடத்தக்கது.