பற்களைக் காட்டுவதால் பறந்து போகும் நோய்கள்..! சூப்பரான டிப்ஸ்
lifestyle : மனம் விட்டு சிரிப்பது என்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க உதவும் நிலையில், அந்த குணாதிசயத்தை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
lifestyle Changes : நீங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என நினைத்தால் உங்கள் வாழ்க்கையில் நகைச்சுவை கட்டாயம் இருக்க வேண்டும். அதனை உங்கள் வாழ்க்கையின் அங்கமாக மாற்றிக் கொண்டால், என்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?. சிலருக்கு சிரிப்பு என்ற குணாதிசயம் இருப்பதே மறந்துபோய்விட்டது. இதற்கு காரணம் அவர்கள் அன்றாட வாழ்க்கையை மிகவும் பிரச்சனையான கண்ணோட்டத்திலேயே சந்திப்பது தான். ஆனால் ஒருவர் நினைத்தால் தனக்குள் நகைச்சுவை உணர்வை வளர்த்து கொள்ள முடியும். அதற்கு முன்னால் நகைச்சுவை உணர்வால் கிடைக்கக்கூடிய நன்மைகளை தெரிந்து கொண்டால் எல்லோரும் இதனை வளர்த்துக் கொள்ள விரும்புவார்கள்.
நகைச்சுவை உணர்வால் கிடைக்கக்கூடிய நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தி
ஒருவர் சிரிக்கும்போது ஆன்டிபாடி உற்பத்தி செய்யும் செல்கள் அதிகரிக்கிறது. டி செல்களின் செயல் திறனும் அதிகரிக்கிறது. இதனால், சளி மற்றும் காய்ச்சல் போன்ற சாதாரண தொற்றுகளை உடல் எதிர்த்து போராடும் வல்லமை பெற்றுக் கொள்கிறது.
மேலும் படிக்க | தேனை இந்த முறையில் முடிக்கு தடவினால் கூடுதல் நன்மை கிடைக்கும்!
இதய ஆரோக்கியம்
நகைச்சுவை உணர்வு இருப்பவர்களுக்கு இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினசரி அதிகமாக சிரிப்பவர்களின் இதய ஆற்றல் வலுவாக இருப்பதுடன் தமனி நோய்கள் பாதிப்பு குறைவாக இருக்கும்.
மன அழுத்தம் ஆபத்து
சிரிப்பு இல்லாதவர்களிடத்தில் மன அழுத்தம் இருக்கும் என்றும் அதனால் வாழ்க்கை முறை நோய்களான நீரிழிவு, பக்கவாதம், இதய நோய் உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கும் என்பதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். நகைச்சுவை இருந்தால் ஒருவரின் ஆயுள் அதிகரிக்கும். வலிகள் கூட பெரிய அளவில் தெரிவிக்காது.
மன ஆரோக்கியம் மேம்பாடு
தினமும் சிரித்தால் மன ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை இருக்காது. கவனச் சிதறல்கள் குறைந்து, தெளிவு உண்டாகும். சிரிப்பு குணாதிசயம் மூலம் ஒருவருக்கு நிறைய நண்பர்களும் கிடைப்பார்கள்.
நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்வது எப்படி?
நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ள அப்படியான சமூக சூழலை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல ஜோக்குகளை தேர்வு செய்து படிப்பது, சிரிப்பு குழுவுடன் இணைந்து அக்குழுவின் நடிவடிக்கைகளில் பங்கேற்பது, சிரிப்பதற்கு என்றே விளையாட்டுகளை விளையாடுவது ஆகியவை உங்களிடத்தில் நகைச்சுவை உணர்வை மேலோங்க செய்யும். எந்தவொரு விஷயத்திலும் நகைச்சுவையான அம்சத்தை நீங்கள் பார்க்க வேண்டும். அந்த சம்பவத்தை வைத்து நீங்கள் சிரிக்க முடியுமா என்பதை மட்டும் யோசிக்க வேண்டும். எந்தவொரு வழி கிடைத்தாலும் உங்களை சிரிக்க வைப்பதற்கான அம்சத்தை பார்க்கவும். நிச்சயம் நகைச்சுவை குணாதிசயம் வளர்ந்துவிடும்.
மேலும் படிக்க | பேய் படங்களை விரும்பி பார்ப்பீர்களா? ‘இந்த’ மாதிரியான ஆளாக இருப்பீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ