பேய் படங்களை விரும்பி பார்ப்பீர்களா? ‘இந்த’ மாதிரியான ஆளாக இருப்பீங்க!

Personality Of People Who Love Horror Movies : ஒரு சிலர், பேய் படங்களை விரும்பி பார்ப்பர். அவர்களின் குணாதிசயம் எப்படிப்பட்டதாக இருக்கும் தெரியுமா? இங்கு அது குறித்து பார்ப்போம். 

Personality Of People Who Love Horror Movies : நமது நண்பர்கள் குழுவிலேயே ஒரு சிலர், பேய் படங்களை விரும்பி பார்ப்பவர்களாக இருப்பர். அதிலும், இரவில்-விளக்குகள் அனைத்தையும் அனைத்து விட்டு, தனியாக அமர்ந்து பேய் படங்களை பார்ப்பர். இது, சுற்றி இருப்பவர்களுக்கு இவர்கள் குறித்த பயத்தை ஏற்படுத்தினாலும், அவர்களுக்கு இது குதூகலத்தை கொடுப்பதாக கூறுவர். இன்னும் சிலர், பேய் படங்கள் பார்க்கும் போது யாரேனும் அலறினால் அதை பார்த்து சிரிப்பர். இப்படி இருப்பவர்கள் எந்த மாதிரியான மனிதர்களாக இருப்பர் என எப்போதாவது யோசித்ததுண்டா? அது குறித்து இங்கு பார்ப்போம். 

1 /8

த்ரில்லிங் பிடித்தவர்கள்: பேய் படம் பிடித்தவர்களுக்கு த்ரில்லிங் அனுபவத்தில் இருக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் Adrenaline rush பிடிக்கும். பயத்தினால் வரும் அந்த அனுபவத்தை அவர்கள் மிகவும் விரும்புகின்றனர்.

2 /8

சமூகத்துடன் ஒத்துப்போவது: பேய் படம் பார்ப்பவர்கள்,  சமூகத்துடன் ஒத்துப்போகும் நபர்களாக இருப்பர். இவர்கள், பிறரை புரிந்து கொள்ளும் திறனும் அதிகமாக இருக்குமாம்.

3 /8

எதிர்கொள்ளும் திறன்: மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றை எதிர்கொள்ளும் மன திடத்தை, இவர்கள் வைத்திருப்பர். எந்த வகையான சூழ்நிலைகள் வந்தாலும் இவர்களுக்கு அதை எதிர்கொள்ள தெரியும்.

4 /8

திறந்த மனம்: பேய் படம் பிடித்தவர்கள், திறந்த மனம் படைத்தவர்களாக இருப்பர். பேய் படங்களில் விவாதிக்கப்படும் விஷயங்கள் போல, நிஜ வாழ்வில் பெரிதும் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்தும் இவர்கள் விவாதிக்க விரும்புவர். 

5 /8

கற்பனை திறன்: பேய் படங்களை பார்ப்பவர்களுக்கு, கற்பனை திறன் அதிகமாக இருக்குமாம். பேய் படங்கள் இவர்களுக்கு நிறைய கற்பனை வளத்தை அதிகரிக்க உதவுமாம். 

6 /8

நகைச்சுவை திறன் மிக்கவர்கள்: பேய் படம் பார்ப்பவர்களுக்கு நகச்சுவை திறன் அதிகமாக இருக்குமாம். இதனால், இவர்களை சுற்றி இருப்பவர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பர். 

7 /8

ஆர்வம்: பேய் படங்களை பார்ப்பவர்கள், ஆர்வம் நிறைந்தவர்களாகவும் இருப்பர். தெரியாததை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு மேலோங்கி இருக்கும். 

8 /8

சிக்கலை தீர்ப்பவர்கள்: ஒரு சிலருக்கு, தன்னிடம் வரும் சிக்கலை தீர்ப்பதற்கு மிகவும் பிடிக்கும். இது போன்ற ஆட்களுக்கும் பேய் படங்கள் மிகவும் பிடிக்குமாம்.