மருமகனுக்கு வரதட்சணையாக கனவில் கூட நினைக்காத பரிசை கொடுத்த மாமனார்!!
`திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்` என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது.
"திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது.
அதுவும், இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்று கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், தனது மருமகனுக்கு திருமண வரதட்சணையாக கனவிலும் நிலைத்து கூட பார்க்கமுடியாத பரிசை வழங்கியுள்ளனர் பெண் வீட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சூர்யங்கட்டா பாரீக் என்ற பள்ளி ஆசிரியர் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் வகையில் ஒரு காரியம் அவர் வாழ்வில் நடந்துள்ளது. அவருக்கும் பிரியங்கா பாஜ் என்ற பெண்ணிற்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்பே அவர் பெண் வீட்டாரிடம் தனக்கு எந்த வரதட்சணையும் வேண்டாம். அதை எதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கண்டிப்புடன் சொல்லிவிட்டார். இந்நிலையில் திருமண நாளான்று அவருக்கு மணப்பெண் திருமண பரிசாக 1000 புத்தகங்கள் அடங்கிய பரிசு ஒன்றை தன் கணவருக்கு வழங்கினார். அதன் மதிப்பு ரூ1 லட்சமாகும்.
தன் மகளுக்கு வரதட்சணையாக ஏதாவது ஒரு பொருளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெண்ணின் குடும்பம் இதை செய்துள்ளது. தங்கள் மகளுக்கும் புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடிக்கும் என்பதால் பெண்ணின் பெற்றோர்கள் இதை செய்துள்ளனர். மேலும் மணப்பெண் இது குறித்து கூறும் போது புத்தகங்கள் தான் நமக்கு அறிவு செல்வத்தை அதிகம் அளிக்கிறது. நம்மிடம் இருந்து அழியாத மற்றும் அழிக்க முடியாத சொத்து அறிவு தான். அதனால் அதையே எனது பெற்றோர் எனது திருமணத்திற்கு வரதட்சணையாக தந்தது மிகழ்ச்சியளிக்கிறது என கூறினார். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.