புதாதித்ய யோகம்! யோகத்தை அனுபவிக்க காத்திருக்கும் நீங்கள் கடகமா? கன்னியா?
புதனும் சூரியனும் இணைவதால் ஏற்படும் புதாதிதித்ய யோகத்தின் முழுப் பயனையும் அனுபவிக்கப் போகும் ராசிக்காரரில் நீங்களும் இருக்கிறீர்களா?
புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரப்படி தேவகுரு பிரகஸ்பதியின் ராசியான மீன ராசியில் புத்தாதித்ய யோகம் உருவாகப் போகிறது. இந்த யோகம் மிகவும் மங்களகரமானது. இந்த யோகம் அனுகூலமான ராசிக்காரர்களுக்கு நிறைய முன்னேற்றத்தையும் பணத்தையும் அள்ளித் தருகிறது.
மார்ச் 15, 2022 அன்று, சூரியன் மீன ராசியில் பிரவேசித்தார், இப்போது மார்ச் 24, 2022 அன்று, புதன் கிரகமும் இந்த ராசிக்குள் நுழைகிறது. இந்த கிரக மாற்றம் மார்ச் 24 முதல் மீனத்தில் புதாதித்ய யோகத்தை ஏற்படுத்தும், இது 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும்.
சூரியன் மற்றும் புதன் இணைவது புதாதித்ய யோகம் (Budhaditya Yogam) என்று அழைக்கப்படுகிறது. இந்த யோகம் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில ராசிக்காரர்களுக்கு புதன் ஆதித்ய யோகம் செல்வ செழிப்பை கொண்டு வரும். கிரகங்களின் அரசரான சூரியன் மீன ராசியில் தற்போது இருக்கிறார்.
குருவின் ராசியில் உருவாகும் செல்வம் தரும் யோகம்! எந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அள்ளிக் கொட்ட போகிறது? எந்த ராசியை சேர்ந்தவருக்கு புதன் கிள்ளிக் கொடுக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | குருவின் உதயத்தால் 7 ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை சூப்பர்
புதன் மீன ராசியில் இருக்கும்போது, அதில் சூரியன் பிரவேசித்தால் புதாதித்ய யோகம் உருவாகிறது. குருவின் ராசியான மீனத்தில் உருவாகப் போகும் இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.
ரிஷபம் - புத்தாதித்ய யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும். அவர்களின் வருமானத்தில் திடீர் அதிகரிப்பு ஏற்படும். நிதி நிலைமை வலுவாகும். வணிகர்கள் புதிய நபர்களுடன் உறவு கொள்வார்கள், இது எதிர்காலத்தில் அவர்களுக்கு வலுவான பலன்களைத் தரும்.
மிதுனம் - புதாதித்ய யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு வேலை-வியாபாரத்தில் பல நன்மைகளைத் தரும். இவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படுவதோடு, வருமானமும் பெருகும். திடீர் பண ஆதாயமும் ஏற்படலாம்.
மேலும் படிக்க | இன்றைய தினத்தன்று மறந்துகூட இதனை செய்துவிடாதீர்கள்
கடகம் - புத்தாதித்ய யோகம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். எல்லாவற்றிலும் வெற்றி பெறுவார்கள். வெளியூர் பயணம் செய்யும் கனவு நிறைவேறும். மொத்தத்தில் கடகத்திற்கு அற்புதமான நன்மைகள் தரும் நேரம் இது.
கன்னி - புத்தாதித்ய யோகம் குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உறவில் இனிமை சேரும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். மறுபுறம், கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் அற்புதமான காலம் இது.
கும்பம்- புத்தாதித்ய யோகம் கும்ப ராசிக்காரர்களுக்குப் பணவரவைத் தரும். திடீரென்று பணம் வந்து சேரும். வர வேண்டிய பணங்களும், நிலுவைத்தொகைகளும் வந்து சேரும். பேச்சு சாமர்த்தியத்தால் பல இடங்களில் நன்மைகள் ஏற்படும்.
(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 2022-ல் 2 முறை ராசி மாறுகிறார் சனிபகவான்: இவர்களுக்கு அடித்தது 2 மடங்கு அதிர்ஷ்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR