சனி பெயர்ச்சி 2022: இந்த ஆண்டு, கர்ம பலனின் கிரகமான சனி பகவான் தனது ராசியை மாற்றப் போகிறார். சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாக இருக்கிறார். 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி சனி கும்ப ராசியில் நுழையவுள்ளார். சனி தற்போது மகர ராசியில் இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகரம் மற்றும் கும்பம் சனி பகவானின் ராசிகளாகும். வேத ஜோதிடத்தின்படி, சனி தேவன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்ப ராசியில் பிரவேசிக்கிறார் சனி பகவான். சனி தனது ராசியை மாற்றும் போது, ​​அனைத்து ராசிக்காரர்களுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாகும். சனி பகவான் எந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுபமான இடத்தில் இருக்கிறாரோ, அவர்களுக்கு ஏகப்பட்ட நன்மைகளை செய்கிறார். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் இருக்கிறது. 


யாருடைய ஜாதகத்தில் சனி அசுப பலன்களை அளிக்கிறாரோ, அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏப்ரல் 29-ம் தேதி சனி பகவான் ராசி மாறிய பிறகு மூன்று ராசிக்காரர்களுக்கும் சனிபகவானின் சிறப்புப் பாக்கியம் கிடைக்கும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


மேஷம்


மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சனி பகவானின் சஞ்சாரம் நன்மை தரும் ஸ்தானத்தில் அதாவது 11ம் வீட்டில் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். 


நிதி நிலை வலுவடையும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சனிபகவான் லாபம் தருவார். அதேசமயம் புதிதாக தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம்! கேதார யோகத்தால் சிக்கலை சந்திக்கும் ராசி


ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களின் 10 ஆவது ஸ்தானத்தில் சனியின் சஞ்சாரம் நடக்கப் போகிறது. ஜாதகத்தின் பத்தாவது வீடு கர்ம வினைகள், தொழில் மற்றும் வேலை தொடர்பானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும். நீங்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த புதிய வேலைக்கான உங்கள் தேடல் முடிவடையும். 


பணம் சம்பாதிக்க உங்களுக்கு வலுவான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் மகிழ்ச்சி, செழுமை மற்றும் சிறப்பான வாழ்க்கையை இந்த காலத்தில் எதிர்பார்க்கலாம். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சனியின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும்.


மகரம்


சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசி-க்கு மாறப் போகிறார். உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் பணம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும். வேலை செய்பவர்களுக்கு சனியின் இந்த மாற்றம் மிகவும் நல்லதாக இருக்கும். 


வியாபாரிகளுக்கும் சனி பகவானின் பெயர்ச்சி நல்ல பலன்களைக் கொண்டு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அரசியல் துறையில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகும். மகரம் என்பது சனி பகவானின் சொந்த ராசியாகும். ஆகையால், சனியின் பெயர்ச்சி இந்த ராசிக்கு மங்களகரமானதாகவும் நன்மை பயக்கும் வகையிலும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


மேலும் படிக்க | கும்ப ராசியில் நுழையும் சுக்கிரன்; இந்த ‘4’ ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் தான்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR