இந்த ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம்! கேதார யோகத்தால் சிக்கலை சந்திக்கும் ராசி

இன்று அற்புதமான நாள். கஜகேசரி மற்றும் வரிஷ்ட யோகங்களால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசமாகும்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 17, 2022, 08:07 AM IST
  • இந்த ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம்!
  • கேதார யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி
  • நீங்கள் மேஷக்காரரா? மோசம் போகாதீர்கள்
இந்த ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம்! கேதார யோகத்தால் சிக்கலை சந்திக்கும் ராசி title=

சூரியனும் சந்திரனும் ஒருவரையொருவர் கேந்திரத்தில் வைத்திருப்பதால் கஜகேசரி யோகம் உண்டாகும். இது தவிர கேதார யோகம், வரிஷ்ட யோகமும் உருவாகி வருகிறது. இன்று 3 சுப யோகங்கள் உருவாகியதால்,  சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.  

இந்த சிறப்பு நாளன்று ஏற்படும் யோகங்கள் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்! 

மேஷம்: கஜகேசரி யோகத்தால் மேஷ ராசியினருக்கு மகிழ்ச்சி ஏற்படும், நிலைமைகள் சாதகமாக அமையும். இந்த நேரத்தில், அதிர்ஷ்டம் வலுவாக இருக்கும் மற்றும் அவரவர் துறையில் முன்னேற்றம் சாத்தியமாகும். மனைவியுடன் உறவு இனிமையாக இருக்கும். ஆனால் தந்தையால் பிரச்சனை வர வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருக்கவும்.

ரிஷபம்:  கேதார யோகத்தால் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. உணவினால் ஆரோக்கியக் குறைவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே, வெளியில் சாப்பிடும் போது கவனமாக இருக்கவும். பழைய முதலீட்டின் பலனை திடீரென்று பெறலாம். இந்த யோகம் உங்கள் வாழ்க்கை துணைக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | ஜாதகத்தில் வெளிநாட்டு பயண யோகம் யாருக்கு அமைகிறது..!!

மிதுனம்: நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், திருமணத்தைப் பற்றி பேசுவது அல்லது யாரையாவது முன்மொழிவதற்கு உகந்த நாள். திருமணமானவராக இருந்தால், மனைவியுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. தாயின் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. கஜகேசரி யோகத்தினால், பணியிடத்தில் சிறப்பு மரியாதை கிடைக்கும்.

கடகம்: சகோதர சகோதரிகளால் சில நன்மைகள் கிடைக்கும், அதனால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குறுகிய பயணங்கள் உண்டு. நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், அதைத் திட்டமிட இதுவே சிறந்த நேரம்.

சிம்மம்: கஜகேசரி யோகம் உங்களுக்கு சமூகத்தில் கௌரவத்தைத் தரும். பழைய முதலீட்டில் லாபம் கிடைக்கும். மாமியார் தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஆனால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி: இந்த யோகத்தின் தாக்கத்தால் பழைய எதிரிகள் உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சிப்பார்கள். கோபத்தை கட்டுக்குள் வைத்திருங்கள், இல்லையெனில் பிரச்சனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கஜகேசரி யோகம் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல, பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

astrology

துலாம்: இந்த யோகத்தின் தாக்கத்தால் வாழ்க்கைத் துணையுடன் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த யோகம் குழந்தைகளுக்கு சாதகமாக இருக்கும். இந்த யோகத்தின் செல்வாக்கின் கீழ், நெருங்கிய ஒருவரிடமிருந்து சிறப்பு பண பலன் கிடைக்கும்.

விருச்சிகம்: இந்த யோகங்களின் செல்வாக்கின் கீழ், உங்கள் பணித் துறையில் எதிரிகள் அதிக சுறுசுறுப்பாக உள்ளனர். தாயாரால் சில சிறப்பான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபச் செய்திகள் வருவதால் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

தனுசு: இந்த யோகங்களின் தாக்கத்தால் உணவு தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனை செல்ல வாய்ப்பு உள்ளது. தந்தையிடமிருந்து பரிசு கிடைக்கும். வரிஷ்ட யோகம் இருக்கும்போது எடுக்கும் எந்த முடிவும் எதிர்காலத்தில் சிறப்பான பண பலன்களை தரும்.

மேலும் படிக்க | கும்ப ராசியில் நுழையும் சுக்கிரன்; இந்த ‘4’ ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

மகரம்: மூன்று யோகங்களின் தாக்கத்தினால் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும், இதயம் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. காதல் உறவுகள் தீவிரமடையும். விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது பயணத்தின் போது கவனமாக இருக்கவும்.

கும்பம்: இந்த நாளில் வீட்டில் தங்கி குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். பரம்பரை சொத்துக்களைப் பெறுவதற்கான சிறப்பு வாய்ப்பு உள்ளது. பழைய சச்சரவுகள் தீர்ந்து குடும்பத்தில் மதிப்பு உயரும்.
 
மீனம்: அரசாங்கத்தினாலோ அல்லது நிறுவனங்களினாலோ நன்மை உண்டாகும். கஜகேசரி யோகத்தினால், எந்த ஒரு நாள்பட்ட நோயிலிருந்தும் விடுதலை பெறுவீர்கள். குடும்பத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும். தாயின் உடல்நிலையில் மிகவும் கவனமாக இருக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்குன் பெறுப்பேற்காது.)

மேலும் படிக்க | செவ்வாய் - சனி சேர்க்கையால் ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News