கும்ப ராசியில் நுழையும் சுக்கிரன்; இந்த ‘4’ ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் தான்..!!

செல்வத்தையும், சுகத்தையும், மகிழ்ச்சியையும் தருபவரான சுக்கிரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 16, 2022, 07:39 PM IST
கும்ப ராசியில் நுழையும் சுக்கிரன்; இந்த ‘4’ ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் தான்..!! title=

ஜோதிட சாஸ்திரன்படி, ஒரு கிரகம் எப்போது ராசி மாறுகிறதோ, அதன் பலன்கள் எல்லா ராசிகளிலும் எதிரொலிக்கும். செல்வத்தையும், சுகத்தையும், மகிழ்ச்சியையும் தருபவரான சுக்கிரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும். 

மார்ச் 31 ஆம் தேதி கும்ப ராசியில் சுக்கிரனின் சஞ்சாரிக்க உள்ளார். இந்நிலையில் சுக்கிரன் ஏப்ரல் 28 வரை அந்த ராசியில் நீடிப்பார். சுக்கிரனின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அளப்பறிய நன்மை பயக்கும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்

வருமான ஸ்தானத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் அமையும். இந்த சுக்கிரனின் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இது தவிர வியாபாரத்தில் தொடர் வளர்ச்சி இருக்கும். இந்த கால கட்டத்தில் எந்த வேலை செய்தாலும் பலன் கிடைக்கும்.

சிம்மம்

சுக்கிரன் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால், கூட்டுத் தொழிலில் அபரிமிதமான பண லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நிதி நிலை இன்னும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பளமும் கூடும். இந்த நேரத்தில், கடின உழைப்பின் பலனை முழுமையாக பெறுவார்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

மேலும் படிக்க | Astrology: ஜாதகத்தில் வெளிநாட்டு பயண யோகம் யாருக்கு அமைகிறது..!!

மகரம்

இந்த ராசிக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் பலன் தரும். செல்வ வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். உத்தியோகத்தில் சம்பளம் உயரும் வாய்ப்பு அதிகம். வியாபாரத்தில் நிதி ஆதாயம் முன்பை விட சிறப்பாக இருக்கும். மேலும், வியாபாரத்தில் சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

கும்பம்

சுக்கிரனின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டம் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். நிலம், சொத்து சம்பந்தமான வேலைகளால் பொருளாதார பலன்கள் உண்டாகும். பெயர்ச்சி காலத்தில், அனைத்துத் தரப்பிலிருந்தும் நிதிப் பலன்கள் கிடைக்கும். இது தவிர, இந்த காலகட்டத்தில் முதலீடு பணத்திற்கும் பயனளிக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்குன் பெறுப்பேற்காது.)

மேலும் படிக்க | செவ்வாய் - சனி சேர்க்கையால் ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News