பம்பர் வருமானம் அளிக்கும் SBI சிறப்புத் திட்டம்: முழு விவரம் இதோ
SBI Annuity Deposit Scheme: உங்கள் வருமானத்தை அதிகரிக்க நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், நிலையான வருமானத்திற்கான சிறந்த விருப்பமான சில திட்டங்களைப் பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
எஸ்பிஐ வருடாந்திர வைப்புத் திட்டம்: முதலீடுகளின் மூலம் மக்கள் தங்கள் வாழ்வை பாதுகாப்பானதாக மாற்றிக்கொள்கின்றனர். முதலீடு மற்றும் சேமிப்புத் திட்டங்கள் ஒருவரது வாழ்வுக்கு மிகவும் அத்தியாவசியமானவையாகும்.
எனினும், சில நேரங்களில் தவறான இடத்தில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களின் சிக்கலை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எந்த பிரச்சனையும் சந்திக்காமல் இருக்க சரியான இடத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது. நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திரத் திட்டத்தைக் (Annuity Scheme) கொண்டு வந்துள்ளது.
வருடாந்திர திட்டத்தின் அம்சங்கள்
1- எஸ்பிஐ-இன் அனைத்து கிளைகளிலிருந்தும் வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
2-ஆன்யூட்டி திட்டத்தில் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
3- எஸ்பிஐ ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு 1 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.
4-மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படும்.
5- இந்தத் திட்டத்தில் 5-கால வைப்புத்தொகையின் வட்டி விகிதங்களும் பொருந்தும்.
6- டெபாசிட் செய்யப்பட்ட அடுத்த மாதத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு தேதியில் ஆன்யூட்டி வழங்கப்படும்
7-ஆன்ய்ட்டி தொகை TDS கழித்த பிறகு சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கில் செலுத்தப்படும்.
8- மொத்தத் தொகையில் நல்ல வருமானத்தைப் பெற இது சிறந்த திட்டமாகும்.
9- சிறப்புச் சூழ்நிலைகளில், ஆன்யூட்டியின் மீதித் தொகையில் 75% வரை ஓவர் டிராஃப்ட் / கடனைப் பெறலாம்.
10-சேமிப்புக் கணக்கு ஆண்டுத் திட்டத்தில் சிறந்த வருமானத்தை அளிக்கிறது.
மேலும் படிக்க | SBI Alert: இதை மட்டும் செய்யாதீர்கள், கணக்கில் உள்ள பணம் காலியாகிவிடும்
எஸ்பிஐயின் வருடாந்திர திட்டம் சிறப்பானது
எஸ்பிஐயின் இந்தத் திட்டத்தில் 36, 60, 84 அல்லது 120 மாதங்களுக்கு ஒருவர் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கான வட்டி விகிதம் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்துக்கான டெபாசிட்டுகளுக்கு சமமாக இருக்கும். நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு நிதியை டெபாசிட் செய்தால், ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான வைப்புத்தொகைக்கு பொருந்தும் அதே வட்டி விகிதத்தில் உங்களுக்கு வட்டி கிடைக்கும். இந்திய குடிமகன் எவரும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் பெற விரும்பினால், எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும்?
ஒரு முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் ரூபாய் மாத வருமானம் பெற விரும்பினால், அதற்கு முதலீட்டாளர் 5 லட்சத்து 7 ஆயிரத்து 965 ரூபாய் 93 பைசாவை டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை திரும்பப் பெறுவீர்கள். இதன் மூலம் முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். ஆகையால், உங்களிடம் மொத்தமாக ஒரு தொகை இருந்தால், தாமதிக்காமல் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் விதிகளை அறிந்து கொள்ளுங்கள்
எஸ்பிஐயின் வருடாந்திர திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்ய விதி உள்ளது. ஆனால் அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. வருடாந்திர கொடுப்பனவில், வாடிக்கையாளர் டெபாசிட் செய்த தொகைக்கு வட்டி விதிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வருமானம் தொடங்குகிறது. இந்த திட்டங்கள் எதிர்காலத்திற்கு சிறந்தவை.
வருடாந்திர திட்டம் Vs தொடர் வைப்புத்திட்டம்
பொதுவாக நடுத்தர வர்க மக்களிடம் மொத்த தொகை குறைவாக இருக்கும். பெரும்பாலான மக்கள் ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் தொடர்ச்சியான வைப்புத்தொகையில் முதலீடு செய்து தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கிறார்கள். RD இல், சிறு சேமிப்புகள் மூலம் தொகை சேகரிக்கப்பட்டு, அதற்கு வட்டி செலுத்தப்பட்டு முதலீட்டாளருக்குத் திருப்பித் தரப்படும். இதன் காரணமாக, வருடாந்திரத் திட்டத்துடன் ஒப்பிடும்போது, சாதாரண மக்களிடையே தொடர் வைப்புத்தொகை மிகவும் விரும்பப்படுகிறது.
மேலும் படிக்க | குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கும் ‘சில’ வங்கிகள் விபரம் இதோ..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR