அதிர்ச்சி செய்தி: 1 ஏப்ரல் முதல் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் இந்த பம்பர் திட்டம் இருக்காது

Senior Citizens Special Fixed Deposit: பல பெரிய வங்கிகளின் திட்டம் விரைவில் முடிவடைகிறது. இத்திட்டம் கடந்த காலங்களில் பலமுறை நீட்டிக்கப்பட்டது. ஆனால் இப்போது அது நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 26, 2022, 04:19 PM IST
  • வங்கிகளின் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம்.
  • இத்திட்டம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
  • SBI, HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் BoB ஆகியவற்றின் திட்டங்கள் பற்றிய விவரங்கள் இதோ.
அதிர்ச்சி செய்தி: 1 ஏப்ரல் முதல் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் இந்த பம்பர் திட்டம் இருக்காது title=

மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக நிலையான வைப்பு: மூத்த குடிமக்களுக்காக பல பெரிய வங்கிகளால் நடத்தப்படும் பிரத்யேக திட்டம் இப்போது மூடப்பட உள்ளது. எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு எஃப்டி திட்டங்கள் உள்ளன. 

இந்தத் திட்டம் ஏப்ரல் 1, 2022 முதல் நிறுத்தப்படும். இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்காக வங்கிகளால் மே 2020 இல் தொடங்கப்பட்டது. வங்கிகள் இந்தத் திட்டத்தை மூடும் முன், வாடிக்கையாளர்கள் இதை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிறப்பு எஃப்டி திட்டம் என்றால் என்ன?

இந்த சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் சாதாரண மக்களுக்கு எஃப்டி-களில் அளிக்கப்படும் விகிதத்தை விட அதிக வட்டி பெறுகிறார்கள். பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், சிறப்பு எஃப்டி இல், அந்த வட்டி விகிதத்தில் கூடுதல் வட்டி விகிதத்தின் பலன் வழங்கப்படுகிறது. செலக்டட் மெச்யூரிடி காலம் கொண்ட எஃப்டி-யில், மூத்த குடிமக்கள் பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை விட 0.50 சதவீதம் வரை கூடுதல் வட்டியைப் பெறுகிறார்கள். அதாவது மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வாடிக்கையாளர் பெறும் வட்டியை விட 1 சதவீதம் வரை கூடுதல் வட்டி கிடைக்கும்.

இத்திட்டம் பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது

வங்கிகள் இந்த திட்டத்தை பலமுறை நீட்டித்துள்ளன. இந்தத் திட்டம் முதலில் 30 செப்டம்பர் 2020 வரை நீட்டிக்கப்பட்டது, பின்னர் டிசம்பர் 31, 2021 மார்ச் 31 வரை, மார்ச் 30 ஜூன் 2021 வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் அது செப்டம்பர் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு 2022 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த சிறப்பு எஃப்டி திட்டத்தின் மூலம் எந்த வங்கி எவ்வளவு விகிதத்தை வழங்குகிறது என்பதை காணலாம். 

மேலும் படிக்க | பான் ஆதார் லிங்க் முதல் ITR தாக்கல் வரை, மார்ச் இறுதிக்குள் செய்ய வேண்டியவை 

எஸ்பிஐ விகேர் டெபாசிட் ஸ்பெஷல் எஃப்டி ஸ்கீம்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை கடன் வழங்குநரான எஸ்பிஐ, மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ விகேர் மூத்த குடிமக்கள் கால வைப்புத் திட்டத்தை மே 2020 இல் அறிவித்தது. இதன் கீழ், 5 ஆண்டுகளுக்கும் மேலான எஃப்டி-களில் மூத்த குடிமக்களுக்கு 0.80 சதவீதம் அதிக வட்டி கிடைக்கும்.

பேங்க் ஆஃப் பரோடா சிறப்பு எஃப்டி திட்டம்

பேங்க் ஆஃப் பரோடா, 'சிறப்பு மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டத்தின்' கீழ் மூத்த குடிமக்களுக்கு 100 அடிப்படை புள்ளிகளை அதாவது 1% அதிக வட்டியை வழங்குகிறது.

ஐசிஐசிஐ வங்கியின் சிறப்பு எஃப்டி திட்டம்

ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களுக்காக 'ஐசிஐசிஐ வங்கி கோல்டன் இயர்ஸ்' என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன் கீழ், எஃப்.டி வைத்திருக்கும் முதியவர்களுக்கு சாமானியர்களை விட 80 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி வழங்கப்படுகிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்கள் பராமரிப்பு எஃப்டி

ஹெச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்காக 'சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், வங்கி எஃப்டி மீது 0.25 சதவீத கூடுதல் பிரீமியத்தை வழங்குகிறது.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு இனி போர்வைகள் வழங்கப்படுமா? ரயில்வே அமைச்சகம் பதில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News