மூத்த குடிமக்களுக்கு பம்பர் அறிவிப்பு: விரைவில் ரயில் டிக்கெட்டில் 55% தள்ளுபடி? அப்டேட் இதோ!
Senior Citizens Concession: கடந்த ஆண்டு ரயில்வே துறையில் நல்ல லாபம் கிடைத்துள்ள நிலையில், தற்போது மூத்த குடிமக்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்துள்ளதா?
மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகை: கடந்த நிதியாண்டு ரயில்வேயைப் பொறுத்தவரை பல விஷயங்களில் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. இந்த காலகட்டத்தில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, பல்வேறு வழித்தடங்களில் எட்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டன. இது தவிர, பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு மூலம் வருவாயில் மிகப்பெரிய அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையில், சுமார் 80 சதவீதம் வருவாய் உயர்வு பதிவாகியுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது 2022-23 நிதியாண்டில் பயணிகள் பிரிவில் ரூ.6,345 கோடியாக இருந்தது. இதுவே இதுவரை இல்லாத அதிகபட்ச வருமானமாகும்.
2022-2023ல் 64 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்
கடந்த நிதியாண்டின் இந்த காலகட்டத்தில் தெற்கு ரயில்வே ரூ.3,539.77 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. முன்னதாக, 2019-20 நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு கிடைத்த அதிகபட்ச வருவாய் ரூ.5,225 கோடியாகும். தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 2022-2023 ஆம் ஆண்டில் சுமார் 64 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2021-22ல் பயணித்த 34 கோடி பயணிகளை விட 88.5 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சலுகையை மீண்டும் வழங்க கோரிக்கை
சரக்கு போக்குவரத்து துறையிலும் தெற்கு ரயில்வே பல சாதனைகளை படைத்துள்ளது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு 4.05 மெட்ரிக் டன் சரக்கு ஏற்றப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு 5.2 மெட்ரிக் டன் பெட்ரோலியம் மற்றும் 3.23 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஏற்றப்பட்டன. ரயில்வேக்கு அபரிமிதமான வருவாய் கிடைத்துள்ளதை அடுத்து, மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டில் வழங்கப்பட்டு வந்த சலுகையை திரும்ப அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் செய்தி!! அரசின் அறிவிப்பால் பம்பர் லாபம்!!
மார்ச் 2020 இல், கொரோனா காலத்தில், மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகை ரயில்வேயால் நிறுத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம். கொரோனா காலத்தில் ரயில்வேயால் முடக்கப்பட்ட அனைத்து வசதிகளும் மீட்டெக்கப்பட்ட போதிலும், பயணிகள் கட்டண சலுகை மீண்டும் தொடங்கப்படவில்லை.
இந்த வசதியை மீண்டும் துவக்க வேண்டும் என பயணிகளின் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ரயில்வேயில் பயணிகளுக்கு ஏற்கனவே 55 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது வருமானம் அதிகரித்துள்ள நிலையில், கட்டணச் சலுகை மீண்டும் தொடங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என கூறினார்.
மேலும் படிக்க | முத்திரைத்தாள் வாங்கும் முன் இந்த புதிய விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ